சூரரை போற்று என்று வெற்றிப் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு Ott ரிலீஸ் மூலம் வந்திருக்கிறது சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படம். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து ‘கூட்டத்தில் ஒருவன்’ என்ற படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், இளவரசு என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார், எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

பழங்குடியினர் உரிமைகளைப் பற்றிப் பேசும் பல படங்கள் வந்திருக்கு. அப்படி வெளியான படங்கள் எல்லாமே காடுகளில் வாழும் பழங்குடியினர் பத்தி தான் இருந்தது. ஆனால், முதல் முதலாக சமவெளியில் வாழ்ந்த பழங்குடியினர் பற்றி பேசின படமாக ஜெய் பீம் படம் அமைந்திருக்கிறது. பொதுமக்கள் மட்டுமில்லாமல் போலீஸ் கூட பழங்குடியினர் மக்கள் மீது ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் ஜெய் பீம் படத்தில் சொல்லப்பட்ட பழங்குடியினர் கதை அப்படியே உண்மையாக நடந்தது.

Advertisement

இது 28 வருடத்திற்கு முன்னால் நடந்த கதை. கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிராமத்தில் முதனை பகுதியில் வசித்தவர் தான் ராஜாக்கண்ணு என்கிற பழங்குடியினர். ராஜாக்கண்ணு நகை திருட்டுவிட்டார் என்று விசாரிக்க போலீஸ் அவரை அழைத்து சென்றார்கள். பின் அவரை காவல்நிலையத்தில் கொடூரமாக அடித்து தாக்கி இருக்கிறார்கள். பின் ராஜா கண்ணுவை சந்திக்க அவர் மனைவி சென்று உள்ளார். ஆனால், அவரை அடித்து துரத்தி இருக்கிறார்கள். அடுத்த நாள் போலீஸ் வந்து ராஜாக்கண்ணு விசாரணையின் போது தப்பித்து விட்டார் என்று ராஜகண்ணு மனைவியிடம் கூறினார்கள்.

ராஜகண்ணுவை கொடூரமாக தாக்கியதால் காவல் நிலையத்திலேயே அவர் இறந்து விட்டார். அவர் உடலை வேறு ஒரு இடத்தில் புதை விட்டார்கள் காவல் அதிகாரிகள். இதை அடுத்து ஊர் தலைவர்கள் ராஜாக்கண்ணு மனைவி எல்லோரும் வழக்கு போட்டார்கள். பின் ராஜாக்கண்ணு மனைவி நீதிமன்றத்தில் என்னையும் என் குழந்தையும் மிகக் கொடூரமாக கொடுமை படுத்தினார்கள் என்று சொன்னவுடன் நீதிமன்றமே அழுது விட்டது.

Advertisement

பின் சில வருடம் போராடிய பிறகு தான் அந்த ஐந்து பேருக்கு 14 வருடம் சிறைத்தண்டனை கிடைத்தது. உண்மையிலேயே அந்த நகையும், பணமும் திருடப்போன வீட்டோட மகள் தான் எடுத்து சென்று இருக்கிறார். இந்த உண்மை சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. ஜெய் பீம் படத்தில் ராஜாக்கண்ணு வாக மணிகண்டனும் அவரது மனைவியாக லேஜிமாவும் நடித்து உள்ளனர்.

Advertisement
Advertisement