காப்பி அடித்த படத்திற்காக சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் நஷ்ட ஈடு தந்துள்ளதாக சோசியல் மீடியாவில் திடுக்கிடும் தகவல் எழுந்துள்ளது. சூர்யா அவர்கள் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். சினிமா உலகில் ஒரு முன்னுதாரணமாக இருக்க இவர் இந்த நிறுவனத்தின் மீது அதிக கவனம் செலுத்துகிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பெரிய பட்ஜெட் படங்கள் தொடங்கி சின்ன பட்ஜெட் படங்கள் என அனைத்து வகை படங்களையும் வெளியிடுகிறது. சமீபத்தில் இவர்கள் அமேசான் பிரைம் வீடியோ உடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
அதில் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் 4 படங்கள் அமேசன் பிரைம் நேரடியாக வெளியாகும் என அறிவித்தனர். தற்போது முதல் படமாக ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் வெளியானது. இந்த படத்தை அரிசில் மூர்த்தி என்பவர் இயக்கியிருந்தார். படத்தின் கதை சிறப்பாக இருந்தாலும் படம் இயக்கிய விதத்தில் கொஞ்சம் சொதப்பல் ஏற்பட்டதால் எதிர்பார்த்த வரவேற்பை படம் பெறவில்லை. அத்துடன் இந்த பட கதை திருட்டு என்ற சர்ச்சையில் சிக்கியது. இந்த படம் 2016 ஆம் ஆண்டு மராத்தியில் வெளிவந்த ரங்கா படாங்கா படத்தின் கதையை அப்படியே தழுவி எடுக்கப்பட்டு இருந்தது.
இதையும் பாருங்க : குழந்தைக்காக ஷூட்டிங்கில் சமந்தா வைத்துள்ள வேண்டுகோள் – உருக்கமாக பேசிய சமந்தாவின் தோழி.
மேலும், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் திருட்டு கதை என்று ரசிகர்கள் விமர்சித்த பிறகு தான் படத்தின் கதை மராத்திய படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பது சூர்யாவுக்கும், பிறருக்கும் தெரியவந்து உள்ளது. இதனால் சூர்யா மிக கோபப்பட்டார். சூர்யா அவர்கள் தனது 2டி என்ற நிறுவனத்தை கட்டுக்கோப்பாகவும் கவனமாகவும் நடத்தி வருகிறவர். இப்படி திட்டமிட்டபடி சூர்யா சரியாக நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் படம் திருட்டு கதை என்றால் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின் சூர்யா இயக்குனர் அரிசில் மூர்த்தியை அழைத்து கண்டித்ததுடன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் மராத்தி படத்தின் தயாரிப்பாளருக்கு காபிரைட் ஆகப் பெரும் தொகையை சூர்யா அளித்து உள்ளார். ஒரு கதை வேறொரு படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று அறிந்ததும் தானாக முன்வந்து நஷ்ட ஈடு கொடுப்பது இதுதான் இந்தியாவிலேயே முதன் முறை என்று கூறப்படுகிறது. உண்மையிலேயே சூர்யா ஒரு ஜென்டில்மேன், நியாயமானவர், நேர்மையானவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சூர்யாவின் இந்த செயல் குறித்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.