சினிமாவில் உள்ள பல்வேறு நபர்கள் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினி, கமல் துவங்கி விஷால் வரை தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இயக்குனரான சுசீந்திரன் நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஒட்டுமொத்த தமிழகமுமே பரபரப்பாக இயங்கி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் சில பிரபலங்களும் அரசியலுக்குள் வந்துவிட்டனர். இந்நிலையில் அஜித்துக்கு கடிதம் எழுதுவது போல் இயக்குநர் சுசீந்திரன் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

இதையும் படியுங்க : ஒரே அறிக்கையில் தெறிக்கவிட்ட அஜித்.! அரசியல் பிரபலங்கள் கூறும் கருத்துக்கள்.!

Advertisement

அதில், ”40 ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு.., உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆனால், அஜித்தோ தனக்கு அரசியலில் வரும் எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை என்று பல முறை சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தன்னுடைய கடைசி பேட்டியில் கூட சொல்லியிருப்பார். இவ்வளவு ஏன் அஜித்தை பற்றி பா.ஜ.க தலைவர் தமிழிசை கூட சமீபத்தில் ஒரு பேரவையில் சொல்லியிருந்தார். அதற்கு ‘எனக்கு அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்பதுபோல் அஜித் அறிக்கை வெளியிட்டிருந்தார் . அஜித் ரசிகர்களும், ‘எங்களுக்கு அஜித் போதும், அரசியல் வேண்டாம் என ரிப்ளை செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இதுதான் தற்போது டிரெண்டிங்!

Advertisement
Advertisement