ஒரே அறிக்கையில் தெறிக்கவிட்ட அஜித்.! அரசியல் பிரபலங்கள் கூறும் கருத்துக்கள்.!

0
324
Ajith

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பா ஜ க கட்சி நடத்திய விழா ஒன்றில் அஜித்தின் ரசிகர்கள் சிலர் கட்சியில் இணைந்தனர். இதயடுத்து அஜித் ரசிகர்கள் தமிழகத்தில் தமரையை மலர செய்வார் என்றும் தமிழசை சௌந்தர்ராஜன் தெரிவித்திருந்தார்.

மேலும், அஜித் ஒரு சிறந்த நடிகர் அவரை போலவே திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர்.அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாரதிய ஜனதாகட்சியில்  இணைந்துள்ளனர என்று தெரிவித்திருந்தார்.

இதையும் பாருங்க : அரசியல் குறித்து அறிக்கை வெளியிட்ட அஜித்.! சவால் விட்டுள்ள தமிழிசை.! ரசிகர்கள் கோபம்.! 

எனவே, அஜித்திருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா என்று பல விவாதங்கள் எழுந்தது. ஆனால்,இதனை தவிடு பொடி ஆக்கும் வகையில் எனக்கும் எனது ரசிகர்களுக்கு எந்த வித அரசியல் நோக்கம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார் அஜித்.

அஜித்தின் இந்த அறிக்கையை கண்டு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் விமர்சித்து வருகின்றார். அதில் திமுகவை சேர்ந்த கனிமொழி ‘ அஜித் எடுத்திருப்பது நல்ல முடிவு, அவருக்கு என் வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் : நடிகர் அஜித் தொழில் பக்தி உள்ளவர். தான் உண்டு தன வேலையுண்டு என்று இருப்பவர். அஜித்தின் தைரியம் பாராட்டக்கூடியது. திறந்த மனதோடு அஜித் தனது நிலையை கூறியிருக்கிறார் என்று தெறிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தர்ராஜன் : கண்டிப்பாக அஜித் கூறியதை நான் வரவேற்கிறேன், மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் ஒரு தெளிவான முடிவு எடுத்துள்ளார். அவரை அரசியலுக்கு வாருங்கள், எங்களுடன் வாங்கள் எல்லாம் நான் அழைக்கவில்லை. அஜித்தின் அறிக்கை பாஜகவிற்கு பதிலடியல்ல என்று கூறியுள்ளார்.