அஜித்த அப்படி சொன்னது என் தப்புதான – 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம் குறித்து சுசீந்திரன். அப்படி என்ன அப்போ சொனார் பாருங்க.

0
529
Suseenthiran
- Advertisement -

அஜீத்தை அரசியலுக்கு வர சொன்னது மிகவும் தவறான ஒன்று என்பதை திரைப்படத்தின் ஆடியோ விழாவில் சுசீந்திரன் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள மிக பிரபலமான இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 2009 ஆம் ஆண்டு வெளி வந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நான் மகான் அல்ல, ராஜபாட்டை, பாண்டிய நாடு, ஜீவா, நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட பல படங்களை கொடுத்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் இயக்கத்தில் வெளி வந்த “கென்னடி கிளப்” மற்றும் “சாம்பியன்” ஆகிய இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த இரண்டு படமும் விளையாட்டை மையமாக வைத்த கதை. கடைசியாக இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன் ‘ திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீரபாண்டியபுரம். இந்த படத்தில் ஜெய், மீனாக்ஷி கோவிந்தராஜன், காளி வெங்கட், பாலா சரவணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக நடிகர் ஜெய் அறிமுகமாகியிருக்கிறார்.

- Advertisement -

வீரபாண்டியபுரம் படத்தின் இசை வெளியீட்டு விழா:

மேலும், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சுசீந்திரன் அவர்கள் அஜித் சாரிடம் அரசியல் குறித்து பேசியதற்கு இன்று மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருக்கிறார். பொதுவாகவே தமிழ் திரையில் உள்ள முன்னணி நடிகர்கள் அரசியலில் களம் இறங்குவது புதிது அல்ல. இதில் டாக்டர் எம்ஜிஆர் வெற்றி பெற்று இருக்கிறார். ஆனால், சிவாஜி கணேசன், விஜயகாந்த், ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட பல நடிகர்கள் போட்டியிடவில்லை. தற்போது உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட்டு சுயேச்சையாக அமோக வெற்றியை அடைந்திருக்கிறது.

அரசியலில் அஜித் குறித்து சுசீந்திரன் கூறியது:

இதனை அடுத்து விஜய் தன்னுடைய கட்சிக்கொடி மற்றும் சின்னத்தையும் நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வருவதற்கு ஒரு பாலம் போடப்பட்டு இருப்பதாக பேசப்படுகிறது. எஞ்சியிருக்கும் ஒரே நடிகர் அஜித்குமார் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து அரசியலில் குதிப்பது குறித்தும், கட்சியில் சேர்வது குறித்தும் பேசினார்கள். ஆனால், அஜித் அதை மறுத்து விட்டார். அதுமட்டுமில்லாமல் இதுகுறித்து 2019 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் கூறியது, அஜித் போன்ற தலைவர் அரசியலுக்கு வரவேண்டும்.

-விளம்பரம்-

அஜித்துக்கு சுசீந்திரன் எழுதிய கடிதம்:

40 ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறோம். இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்க உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன் என்று சுசீந்திரன் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் இதுகுறித்து தற்போது தன்னுடைய படத்தின் விழாவில் சுசீந்திரன் அவர்கள் கூறியிருப்பது, அஜித் சாரை அரசியலுக்கு அழைத்து இருக்கக்கூடாது. சில நேரங்களில் நான் என்னுடைய உணர்ச்சிகளை விட்டு வெளியேறுகிறேன். இப்போது எனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துவிட்டேன்.

சுசீந்திரன் திரைப்பட விழாவில் கூறியது:

ஒரு முறை நான் அஜித்தை அரசியலுக்கு வர சொன்னேன். பின் இதை பற்றி ஆழமாக யோசித்தபோது அஜித் தனது குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு தரமான படங்களையும் தருகிறார் என்று உணர்ந்தேன். அரசியல் என்பது மிகவும் கடினமானது. இதனால் அமைதி இருக்காது. அஜித் சார் அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அந்த மாதிரி என் மனதில் தோன்றியது சொன்னது தவறு என்பது இன்று உணர்ந்து கொண்டேன். என்றென்றும் அஜித் அமைதியான வாழ்க்கையை வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன். அவரது ரசிகர் பட்டாளம் அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறி இருந்தார். இப்படி சுசீந்திரன் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement