பெண்களுக்கு தற்காப்பு கலை, 1000 மரம், விமான ஓட்டுநர் – சுஷாந்த்தின் நிறைவேறாத ஆசைகள்.

0
790
sushanth

எம்.எஸ் தோனியின் வாழ்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் தனெக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் சில தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இவர் நடனம் மற்றும் நடிப்பு கலைகளை முறையாக கற்றுக் கொண்டு திரைத்துறைக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் இவர் நடன கலைஞராகவும், சிறு சிறு கதாபாத்திரங்களில் தான் படங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து உள்ளார்.

இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் நிறைவேறாத ஆசைகள் குறித்து அவரே கைப்பட எழுதிய பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் சுஷாந்த் இறந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. தற்போது இவருக்கு 34 வயது தான் ஆகிறது. மேலும், நடிகர் சுஷாந்த் சிங் கடந்த இரண்டு மாதங்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது நிறைவேறாத ஆசைகள் குறித்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

- Advertisement -

தனது வாழ்நாளில் 100 குழந்தைகளையாவது தனது சொந்த செலவில் நாசாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு துறையில் பணியாற்ற வேண்டும். பெண்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுத் தர வேண்டும். குழந்தைகளுக்கு யோகா, நடனம் உள்ளிட்டவற்றை கற்றுத் தர வேண்டும். லம்போகினி காரை வாங்க வேண்டும். விமானத்தை இயக்க கற்றுக் கொள்ள வெண்டும். சாம்பியனுடன் டென்னிஸ் விளையாட வேண்டும். குறைந்தது 1000 மரங்களை நட வேண்டும். அன்டார்டிகாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். ஐரோப்பா முழுவதும் ரயில் மூலம் பயணம் செய்ய வேண்டும். கிரிக்கெட் போட்டியை இடது கையால் விளையாட வேண்டும்.

யோகாவை கற்றுக் வேண்டும். எரிமலை தீப்பற்றி எரியும் போது அதை புகைப்படம் எடுக்க வேண்டும்.10 வகை நடனத்தை கற்று கொள்ள வேண்டும். விவசாயம் செய்வது எப்படி என தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி சுஷாந்தின் ஆசைகள் 50 க்கும் மேல் நீண்டு கொண்டே போனது. அதோடு இவர் தனது ஆசைகளில் நிறைவேறியவற்றை தனது சமூகவலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இவர் முதல் ஆசையாக பறக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அது நிறைவேறியதாக பதிவிட்ட புகைப்படமும் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement