சில தினங்களாகவே இந்தியா முழுவதும் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திரை உலகம் மற்றும் ரசிகர்களால் சுஷாந்த் சிங்கின் மரணத்தை ஏற்று கொள்ள முடியவில்லை. சினிமா துறையில் சுஷாந்த் சிங்க்கு ஏற்பட்ட மன அழுத்தம் தான் அவரின் தற்கொலை காரணம் என்று சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவை தாங்க முடியாமல் ஏங்கித் தவிக்கும் வாயில்லா ஜீவனின் வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
அதை பார்க்கும் போது அனைவரின் நெஞ்சமும் பதிர வைக்கிறது. சுஷாந்த் சிங்கின் மறைவினால் அவரது குடும்பம் மட்டும் இல்லாமல் அவருடைய செல்லப்பிராணி Fudge தவித்து வருகிறது. சுஷாந்த்தும் அவருடைய செல்ல பிராணி Fudge சேர்ந்து நிறைய வீடியோக்கள் செய்து இருக்கிறார்கள். Fudge சுஷாந்த்தின் நெருங்கிய நண்பர் என்றே சொல்லலாம்.
ஆனால், இந்த வாயில்லா ஜீவன் சுஷாந்த் இல்லாமல் சோகமாக படுத்திருக்கிறது. யார் வந்து கதவை தட்டினாலும் உடனே ஓடிப்போய் பார்க்கிறது. அவர்கள் சுஷாந்த் இல்லை என்று தெரிந்தவுடன் திரும்பி வந்து சோகமாக படுத்துக் கொள்கிறது. மேலும், அந்த வாயில்லா ஜீவன் போனில் சுஷாந்த் புகைப்படத்தை வைத்து பார்த்துக் கொண்டே இருக்கிறது.
போன் ஸ்கிரீன் ஆப் ஆன உடனே அதை ஆன் செய்து சுஷாந்த் முகத்தையே புகைப்படத்தையே பார்த்துக்கொண்டு இருக்கிறது. அந்த வாயில்லா ஜீவன் எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பது பார்ப்பதற்கே நெஞ்சை உலுக்குகிறது. தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.