சுஷாந்த் சிங் வாழ்ந்த வீட்டின் உரிமையாளருக்கும் நேர்ந்த சோகம் – புலம்பி அவரே சொன்ன விஷயம்.

0
466
- Advertisement -

நடிகர் சுஷாந்த் தங்கிருந்த வீட்டின் தற்போதைய நிலை குறித்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. நடிகர் சுஷாந்த் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து இருந்தார். பின்னர் தொலைக்காட்சி டான்சராகவும், சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.

-விளம்பரம்-
sushant

2010 ஆம் ஆண்டு வெளியான Kai Po Che என்ற படம் மூலம் தான் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் சுஷாந்த் சிங். அதற்கு பிறகு இவர் சிங் படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் எம்.எஸ் தோனியின் வாழ்கை வரலாற்று படத்தில் ரீல் தோனியாகவே மக்கள் மனதில் இடம் பிடித்தார் சுஷாந்த். பிறகு பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தார். மேலும், தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், மருத்துவ ஆலோசனைகளை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சுஷாந்த் தற்கொலை:

இந்த சூழ்நிலையில் தான் சுஷாந்த் தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை குறித்து சோசியல் மீடியாவில் பல விதமான சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தது. இவரின் தற்கொலைக்கு காரணம் சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ, அமலாக்கத்துறை, போதைப்பொருள் ஆகிய 3 பிரிவுகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் சுஷாந்த் தற்கொலை மர்மமாகவே இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சுஷாந்த் சிங்குக்கு அவருடைய காதலி ரியா சக்ரவர்த்தி போதை பொருளை அதிக அளவு கொடுத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

சுஷாந்த் தங்கி இருந்த வீடு:

இந்த நிலையில் சுஷாந்த் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் போட்ட கண்டிஷன் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது சுஷாந்த் சிங் அவர்கள் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் உள்ள வாடகை வீட்டிற்கு குடியேறி இருந்தார். அந்த வீட்டிற்கு மாதம் 4.51 லட்சம் வாடகை கொடுத்து இருந்தார். நான்கு படுக்கை அறைகள் கொண்ட 3600 சதுர அடி கொண்ட இந்த வீடு கடற்கரையை நோக்கி இருக்கிறது.மேலும், சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதில் இருந்தே அந்த வீடு காலியாக தான் இருக்கிறது. சுஷாந்த் இறந்து இரண்டரை ஆண்டுகள் முடிந்த நிலையிலும் இன்னும் அந்த வீட்டுக்கு யாரும் வாடகை கூட தரவில்லை.

-விளம்பரம்-

தரகர் ரஃபீக் மெர்ச்சண்ட் டீவ்ட்:

இந்நிலையில் தரகர் ரஃபீக் மெர்ச்சண்ட் தனது டிவ்ட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர், கார்ப்பரேட் நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு வாடகைக்கு விட வீட்டு உரிமையாளர் முடிவு செய்து இருக்கிறார். அதுவும் மாதம் ஐந்து லட்சம் வாடகை விடப்படும் என்று கூறி இருக்கிறார். வீட்டை பார்க்க வருபவர்களிடம் இதற்கு முன்பு இந்த வீட்டில் சுஷாந்த் வாடகைக்கு இருந்ததாக முன்கூட்டியே சொல்லி விடப்படுகிறது. இதனால் அனைவருமே இந்த வீட்டிற்கு வர பயப்படுகின்றனர். வீட்டை பார்க்க கூட வர பயப்படுகிறார்கள்.

வீட்டு உரிமையாளர் சொன்னது:

வீட்டை பார்க்க வருபவர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது. வீட்டு உரிமையாளரும் வீட்டு வாடகையை குறைக்க மறுக்கிறார். வாடகையை குறைத்தால் உடனே வாடகைக்கு சென்று விடும். மக்கள் சர்ச்சை இல்லாத வீடுகளை வாங்கவே விரும்புகின்றனர். சுஷாந்த் என்று சொன்னவுடனே பலரும் அதைப்பற்றி கவலைப்படாமல் விடை பார்க்க வருகின்றனர். ஆனால், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அந்த வீட்டை வாடகைக்கு எடுக்க வேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள். சினிமா துறையில் தொடர்பு உள்ளவர்களுக்கு வீட்டை வாடகைக்கு கொடுப்பதில்லை என்று உரிமையாளரும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement