சுஷாந்த் இறப்பு செய்தி கேட்டு சாப்பிடாமல் இருந்து உயிரை விட்டுள்ள உறவினர்.

0
1515
sushanth
- Advertisement -

பாலிவுட்டில் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறப்பு ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும் உலுக்கி போட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே சுஷாந்த் சிங் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் செய்திகள் வெளிவந்தன. தற்போது இவருக்கு 34 வயது தான் ஆகிறது. ரீல் எம்.எஸ் தோனியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். ஆரம்பத்தில் இவர் நடன கலைஞராகவும், சிறு சிறு கதாபாத்திரங்களில் தான் படங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாந்த்ராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் சுஷாந்த் சிங் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரண செய்தியை அறிந்து ரசிகர்களும், பிரபலங்களும் கவலையில் உள்ளார்கள். மேலும், சுஷாந்த் சிங் மூச்சு திணறலால் உயிரிழந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சுஷாந்தின் இறுதி சடங்குகள் அவரது உறவினர்கள் முன்னிலையில் மும்பையின் பவன் ஹன்சின் வைல் பார்லே வில் நடைபெற்றது. இந்நிலையில் சுஷாந்த் உறவினர் சுதா தேவி உடல் நலம் முடியாமல் இறந்து உள்ளார். சுஷாந்த் இறந்த செய்தியை கேட்டு பீகார் மாநிலம் புர்னியாவில் உள்ள சுதா தேவி சாப்பிடாமல் இருந்து உள்ளார். பின் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்.

இந்த செய்தி எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங்கின் இறுதி சடங்கு முடிவதற்கு முன்பே சுதா தேவி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் தொடர்ந்து பிரபலங்கள் இறந்து கொண்டே வருகின்றனர். நடிகர் சுஷாந்த் சிங்கின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சுஷாந்த் உறவினர் மற்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement