தோனி பிறந்தநாளில் விஜய்,ஷாருகான் முதல் அவெஞ்சர்ஸ் சாதனை வரை முறியதடித்த சுஷாந்த் படத்தின் ட்ரைலர்.

0
1707
- Advertisement -

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் ஒட்டுமொத்த திரை உலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் உள்ளது. இவருடைய தற்கொலைக்கு காரணம் என்ன என்று தெரியாமல் மர்மங்கள் நிறைந்ததாக நீண்டு கொண்டே போகிறது. இருந்தாலும் நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தத்தினால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று பல தரப்பில் பேசப்படுகிறது. இதனால் பல பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் கடைசி படமான தில் பெச்சாராவை ott தளத்தில் வெளியிடுவதாக சமீபத்தில் அறிமிக்கப்ட்டது. ஆனால், சுஷாந்தின் கடைசி படத்தை நேரடியாக திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும் இந்த திரைப்படம் வரும் ஜூலை 24 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே அதிக லைக்குகளைப் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு யூடியூபில் வெளியான சினிமா டிரெய்லர்களில் ஹாலிவுட் படங்களான அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் டிரெய்லர் மொத்தமாக 36 லட்சம் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது.

அந்த சாதனையை ‘தில் பெச்சாரா’ படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்திற்குள்ளாகவே முறியடித்துள்ளது. தற்போது வரை ‘தில் பெச்சாரா’ டிரெய்லர் 50 லட்சம் லைக்குகளுடன் 2.5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். பிகில் பட ட்ரைலர் வெளியான போது தான் பிகில் படத்தின் ட்ரைலர் 2 மில்லியன் பார்வைலர்களால் லைக் செய்யப்பட்டு இந்தியாவில் அதுவரை அதிகம் லைக் செய்யப்பட்ட ட்ரைலராக சாதனை படைத்தது. அதற்கு முன்பாக ஷாருக்கானின் ஸிரோ திரைப்படம் தான் 1.9 மில்லியன் லைக் பெற்று அதிக லைக் செய்யப்பட்ட ட்ரைலர் என்ற சாதனையை செய்திருந்தது. ஆனால், பிகில் திரைபடத்தின் ட்ரைலர் 2 மில்லியன் லைக்ஸ்களை பெற்ற ஒரு சில மணி நேரத்தில் ஷாருக்கானின் ஸிரோ ட்ரைலரும் 2 மில்லியன் லைக்ஸ்களை பெற்றது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கடுப்பில் ஆழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement