சுஷாந்த்தின் மரணத்தில் சந்தேகம். மும்பை விரைந்த மைத்துனர் டிஜிபி.

0
1602
sushanth
- Advertisement -

பாலிவுட் திரையுலகில் சில தினங்களுக்கு முன் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இவர் திரைத்துறை மீது இருந்த ஆர்வத்தினால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். நடனம் மற்றும் நடிப்பு கலைகளை முறையாக கற்றுக் கொண்டு திரைத்துறைக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் இவர் நடன கலைஞராகவும், சிறு சிறு கதாபாத்திரங்களில் தான் படங்களில் நடித்து வந்தார். 2010 ஆம் ஆண்டு வெளியான Kai Po Che என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து உள்ளார். எம்.எஸ் தோனியின் வாழ்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் தனெக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். இந்நிலையில் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதை திரையுலக பிரபலங்களாலும், ரசிகர்களாலும் நம்ப முடியவில்லை. சுஷாந்த் இறந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

- Advertisement -

இவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் உடலை போலீஸ் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடிகைகள், நடிகர் என பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக சுஷாந்த் சிங் மறைவுக்கு தங்களுடைய இரங்கல்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய மைத்துனரும், காவல்துறை அதிகாரியுமான ஓ.பி. சிங் கூறியுள்ளார். இதையடுத்து தற்போது இவர் மும்பைக்கு வந்து இந்த வழக்கை விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement