இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக கருத்து வெளியிட சின்மயி, லீனா மணிமேகலைக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு. முழு விவரம் இதோ.

0
476
leena
- Advertisement -

இயக்குனர் சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரம் இல்லாத கருத்துக்களை வெளியிட்ட லீனா மணிமேகலை, பாடகி சின்மயி மீது சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே மீடு பிரச்சனை சோசியல் மீடியாவில் தலைவிரித்து ஆடுகின்றது. முன்னணி நடிகைகள் முதல் துணை நடிகைகள் வரை என பலரும் இந்தப் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். அதிலும் பின்னணி பாடகி சின்மையின் மீடு பிரச்சனை இன்று வரை சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இதனைத்தொடர்ந்து வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் சின்மயி விமர்சித்து டீவ்ட் போட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இயக்குனரும், நடிகருமான சுசிகணேசன் குறித்து சின்மயி விமர்சித்து இருந்தார். அது என்னவென்றால், சுசிகணேசன் தற்போது தான் இயக்கும் படத்திற்கு ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று பெயர் வைத்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதைப் பார்த்த சின்மயி, இப்படி ஒரு ஆளுடன் படத்தில் இளையராஜா சார் வேலை செய்வதா? இவரைப் பற்றி பல சர்ச்சைகள் சோஷியல் மீடியாவில் வந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

- Advertisement -

சுசிகணேசன்- லீனா பிரச்சனை:

ஆனால், எல்லாம் தெரிந்தும் இவருடன் இசையின் இமயம் இளையராஜா பணியாற்றுகிறாரா? என்று பதிவிட்டு இருந்தார். ஏன்னா, சில வருடங்களுக்கு முன் நடந்த லீனா மணிமேகலை, சுசி கணேசன் விவகாரம் பலருக்கும் தெரியும். காரில் ஏறி பாலியல் ரீதியாக சுசிகணேசன் தொந்தரவு கொடுத்தார் என்று லீனா சுசிகணேசன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார் சுசிகணேசன். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. இப்படி லீனா மணிமேகலை, சின்மயி இருவரும் இயக்குனர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்ததற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சுசி கணேசன் அளித்த பேட்டி:

மேலும், இது குறித்து சுசி கணேசன் கூறியிருப்பது, தனக்கு எதிரான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை லீனா மணிமேகலை பரப்பி வருகிறார். உண்மைத்தன்மையை ஆராயாமல் பேஸ்புக், டுவிட்டர் என்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார். இதற்கு தடை விதிக்க வேண்டும். என்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டதற்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் இயக்குனர் சுசி கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

-விளம்பரம்-

சுசிகணேசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியது:

இந்நிலையில் இந்த வழக்கில் சுசிகணேசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இது தொடர்பாக பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, லீனா மணிமேகலை மீது தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தங்கள் தரப்பை பழிவாங்கும் நோக்கில் லீனா, சின்மயி உள்ளிட்டோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா உடன் இணைய உள்ள நிலையில் திரைத்துறையில் எங்களுடைய நட்பை கெடுக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகின்றார்கள் என்று கூறியிருந்தார்.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் கூறியிருப்பது, சுசி கணேசன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்ட லீனா மணிமேகலை, சின்மயி ஆகியோருக்கு சுசிகணேசன் தொடர்பான ஆதாரமற்ற தகவலை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது. அதேபோல் இந்த வழக்கில் லீனா மணிமேகலை, சின்மயி மற்றும் கூகுள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கை இன்னும் 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement