இந்த விளம்பரத்துக்கா விஜய் சேதுபதி நடிச்சாரு..! பாத்தா நீங்களே ஆச்சரியப்படுவீங்க ?

0
4545
Vijay Sethupathi

ஒரு புதிய பொருள் மார்க்கெட்டுக்கு வருகிறதென்றால், அந்தப் பொருள் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பொருட்டு சஸ்பென்ஸுடன் விளம்பரம் தயாரிக்கப்பட்டு டி.வி சேனல்களில் உலவவிடுவது வழக்கம்.
Vijay Sethupathi
அப்படி ஒரு விளம்பரம் சில நாள்களாக டி.வி சேனல்களில் வந்துக்கொண்டிருக்கிறது. வழக்கமான சஸ்பென்ஸ் விளம்பரம்தானே என்று அதைக் கடக்கமுடியவில்லை. ஏனென்றால் அதில் நடித்திருப்பது விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி மட்டுமல்ல, மிமிக்ரி சேது, விவேக் பிரசன்னா, லிங்கா, ‘மாரி’ ஜார்ஜ் எனப் பலர் நடித்திருக்கும் இந்த விளம்பரம், ஒரு மன்னர் காலத்து தர்பார் போன்று எடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

Vijay Sethupathi

இது என்ன மாதிரியான விளம்பரமாக இருக்கும் என்று சிலரிடம் விசாரித்தபோது, பிரபல சேமியா கம்பெனி ஒன்று புதிதாக ஆர்கானிக் உணவு பொருள்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அதற்காகவே விஜய் சேதுபதி நடிப்பில் விளம்பரம் தயாரிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.

-விளம்பரம்-

Vijay Sethupathi
தீபாவளிக்கு முன்னரே இந்த சஸ்பென்ஸ் வீடியோவை வெளியிட்டு, தீபாவளியன்று அந்த சஸ்பென்ஸை உடைக்கலாம் எனத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நினைத்துள்ளனர். ஆனால், சில காரணங்களால் அதில் காலதாமதம் ஏற்பட்டு தற்போதுதான், சஸ்பென்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Advertisement