தனுஷ் மகன் கேப்டன், துணை கேப்டன் இந்த நடிகரின் மகள் தானாம் – யார் பாருங்க.

0
1097
dhanush
- Advertisement -

தனுஷ் மகன் படிக்கும் பள்ளியில் இன்னொரு நடிகரின் மகள் துணை கேப்டன் ஆகிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது தனுஷ் அவர்கள் நானே வருவேன், வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படம் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஹாலிவுட் படம் தி கிரே மேன். அவெஞ்சர் பட இயக்குனர்கள் இயக்கிய படம் தான் தி கிரே மேன். பிரம்மாண்ட பொருட் செலவில் வெளியாகி இருந்த இந்த படத்தில் நடிகர் தனுஷ் நடித்து இருந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

- Advertisement -

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு:

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின் திருச்சிற்றம்பலம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது. இதனை ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் சில மாதங்களுக்கு முன்பு 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. தனுஷ்- ஐஸ்வர்யாவின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு இருந்தார்கள்.

தனுஷ்- ஐஸ்வர்யாவின் மகன்:

மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவருமே தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.மேலும், பிரிவிற்கு பின் இருவரும் எந்த ஒரு இடத்திலும் சந்தித்து பேசிக்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், தனுஷ்- ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா. இவர் தனது பள்ளியின் விளையாட்டு கேப்டனாக பதவி ஏற்றிருக்கிறார்.

-விளம்பரம்-

பிரபல நடிகரின் மகள்:

அதை காண தனுஷ்- ஐஸ்வர்யா சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில் இதே பள்ளியில் இன்னொரு தமிழ் நடிகரின் மகளும் ஜூனியர் விளையாட்டு அணியில் கேப்டனாகி இருக்கிறார். அதாவது, தனுஷின் மகன் யாத்ரா சீனியர் விளையாட்டாகான அணியில் கேப்டன் ஆகிருக்கிறார். ஜூனியர் விளையாட்டு அணியில் அர்னா கேப்டன் ஆகிருக்கிறார். அவர் வேற யாருமில்லை பிரபல நடிகர் எஸ்வி சேகரின் பேத்தியும், அவருடைய மகன் நடிகர் அஸ்வின் சேகரின் மகள் தான் அர்னா.

வைரலாகும் புகைப்படம்:

இதனை தற்போது எஸ்வி சேகர் தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டு தன்னுடைய பேத்திக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தற்போது தனுஷின் மகன் யாத்ரா மற்றும் அஸ்வினின் மகள் அர்ணா ஆகிய இருவரும் தாங்கள் படிக்கும் பள்ளியின் விளையாட்டு அணியில் கேப்டன் ஆகி இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement