சன் குழுமம் நடத்தி வரும் புதிய தொலைக்காட்சியான சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சொப்பன சுந்தரி’ என்ற புதிய நிகழ்ச்சியில் பெண்கள் சிலர் அடிக்கும் கூத்துக்கள் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்து வருகிறது.இந்த நிகழ்ச்சி குறித்து சன் டிவியின் முன்னாள் தொகுப்பாளரான ஸ்வர்ணமல்யா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement

ஒரு காலத்தில் சன் டிவி யில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ்,நீங்கள் கேட்ட பாடல் போன்ற பல நிகழ்ச்சிகளை நம்மால் மறக்கமுடியாது.அதே போன்று தான் இளமை புதுமை என்ற நிகழ்ச்சி மூலம் 90ஸ் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்வர்ணமால்யா.

ன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற நிகழ்ச்சி மூலம் தனது கலை பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் பல டீவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்து வந்தார்.இவர் திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தது மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற படத்தில் தான்.அதன் பின்னர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஸ்வர்ணமால்யாவிடம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் மீடூ விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், ஒரு ஆணும் பெண்ணும் அளவாக பழக வேண்டும், ஒரு பெண்னிடம் அவளது விருப்பம் இல்லாமல் நீங்கள் ஒல்லியாக உள்ளீர்கள் என்று கூறுவது கூட தவறு தான். ஏனென்றால் நீங்கள் அந்த பெண்ணின் உடல் அமைப்பை வர்ணிக்கின்றனர். எனவே, ஒரு பெண்ணிற்கு விருப்பம் இல்லாமல் செய்யும் அனைத்தும் பாலியல் தொல்லை தான். ஆனால், அத்தனையும் நாம் பெரிதாக பேசுவது இல்லை.

Advertisement

இத்தனையோ தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் பல கூத்துக்கள் நடக்கின்றன. நான் சமீபத்தில் தெரியாமல் ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சியின் ப்ரோமோ விடியோவை பார்த்தேன். அதை பார்த்து நன் நான் மனமுடைந்து விட்டேன். இப்படியெல்லாம் வைத்துக்கொண்டு எப்படி நீங்கள் கலாச்சாரத்தை காப்பற்ற போகிறீர்கள். ஒரு நிகழ்ச்சியில் ஆணும் பெண்ணும் இப்படியெல்லாம் நடந்து கொண்டால் எப்படி சமுதாயத்தின் அடித்தளத்தில் மாற்றாம் நிகழும் என்று மிகவும் கடுமையாக குற்றம் சட்டியுள்ளார்.

Advertisement