வானத்தைப்போல இடத்தை பிடிக்க போகும் புது சீரியல், ஹீரோயின் யாருன்னு தெரியுமா?

0
384
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப்போல சீரியல் முடிவடைய இருக்கும் நிலையில் தற்போது அதற்கு பதிலாக ஒளிபரப்பாக இருக்கும் புது சீரியல் குறித்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் ‘வானத்தைப்போல’ . இந்தத் தொடர் அண்ணன்- தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை.

-விளம்பரம்-

சீரியலில் அண்ணன் சின்ராசு மீது பாசத்தை பொழியும் தங்கையாக துளசி இருக்கிறார். இந்த தொடரில் முதலில் கதாநாயகியாக துளசி ரோலில் ஸ்வேதா நடித்திருந்தார். சின்ராசு ரோலில் தமன் நடித்திருந்தார். பின் துளசி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா சீரியலில் இருந்து விலக அவருக்கு பதில் நடிகை ம் , மன்யா ஆனந்த் நடித்து வருகிறார். அதன் பின் சின்ராசு வாக நடித்து வந்த தமனும் விலக அவருக்கு பதிலாக சீரியலில் நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார்.

- Advertisement -

வானத்தைப்போல சீரியல்:

இதுபோல் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீப காலமாக இந்த சீரியலில் பரபரப்பான திருப்பங்களுடன் செல்வதால் டிஆர்பி யிலும் முன்னிலையில் வகுத்து வருகிறது. மேலும் சேனலில் ப்ரைம் டைமில் அதிக ரேட்டிங் பெற்ற தொடர்களில் இதுவும் ஒன்று. இதுவரை இந்தத் தொடர் 1000 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. இந்நிலையில் வானத்தைப்போல சீரியல் திடீரென முடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

முடியப்போகும் வானத்தைப்போல:

அதாவது தற்போது புதிய சீரியல்கள் வர இருப்பதால் ரொம்ப நாளாக ஒளிபரப்பாகி இருக்கும் சீரியல்களை முடிக்கலாம் என்று சேனல் தரப்பில் முடிவு செய்து இருக்கிறார்களாம். அதுமட்டுமில்லாமல், ஏற்கனவே 1000 எபிசோடுகளை தாண்டியதால், டிஆர்பி யில் முன்னிலையில் இருந்தாலும் புது சீரியல்களுக்காக வானத்தைப்போல சீரியலை முடிக்கிறார்களாம். தற்போது இந்த செய்தி தான் வானத்தைப்போல ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-

புது சீரியல்:

இந்நிலையில் வானத்தைப்போல சீரியல் இந்த வாரம் முடிவடைய இருப்பதால், அதற்கு பதிலாக ‘ஈரமான ரோஜாவே’ தொடர் நாயகி சுவாதியின் புதிய சீரியல் தான் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிந்த ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் நடிகை சுவாதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது என்று சொல்லலாம்.

மூன்று முடிச்சு:

அதற்குப் பிறகு வேறு சீரியலில் கமிட் ஆகாமல் இருந்த சுவாதி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘மூன்று முடிச்சு’ சீரியலில் கதாநாயகியாக கமிட்டாகியிருக்கிறார்‌. இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடிகர் நியாஸ் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே புதுப்புது அர்த்தங்கள், மந்திரப்புன்னகை போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். எனவே இந்த வாரம் வானத்தைப்போல முடிவடைவதால், இந்த தொடர் ஒளிபரப்பான அதே நேரத்தில் மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement