கமலை கட்டிப்பிடித்து டி ராஜேந்திரன் அழுத காரணத்தை குறித்து ஆடியோ லான்ச் விழாவில் கமலஹாசன் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்.
மேலும், இந்த படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கேங் ஸ்டாராக மிரட்டி இருக்கிறார். ஜெயிலில் இருக்கும் விஜய் சேதுபதியை காப்பாற்ற பகத் பாசில் முயற்சி செய்கிறார்.
விக்ரம் படத்தின் கதை:
இவர்களின் திட்டத்தை புரிந்து கொண்ட அவர்களின் முயற்சியை முறியடிக்க போராடுகிறார்.இதனால் அடுத்தடுத்து நடக்கும் ஆக்ஷன் தான் படத்தின் கதை. சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் முதல் பாடல் பத்தல பத்தல வெளியாகி இருந்தது. இந்த பாடலை கமல் எழுதி பாடி இருந்தார். அதுவும் இந்த பாடல் சென்னை தமிழில் பாடி இருந்தார். மேலும், இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அதோடு இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமலின் விக்ரம் படம் அமைந்திருக்கிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா:
இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மே 15ஆம் தேதி விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இதில் விக்ரம் படத்தின் படக்குழுவினரை தவிர இயக்குனர் பா ரஞ்சித், சிம்பு, உதயநிதி ஸ்டாலின், நரேன், பார்த்திபன், காளிதாஸ் ஜெயராம் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.
விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்:
மேலும், விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு விஷயங்களை பல பிரபலங்கள் பேசி இருந்தார்கள். பா ரஞ்சித், கமலை வைத்து இயக்கும் படம் குறித்து பேசியிருந்தார். பின் உதயநிதி ஸ்டாலின் கமலை எல்லாம் யாரும் மிரட்ட முடியாது. இதில் அவர் ஒப்புதலுடன் தான் இந்த படத்தில் இணைந்து தயாரித்தோம் என்றெல்லாம் கூறியிருந்தார். அதேபோல் மேடையில் பேசிய சிம்பு அரசியல், சினிமா பற்றி பல விஷயங்களையும் பேசி இருந்தார். இந்நிலையில் ஆடியோ விழாவின் மேடையில் கமல் படம் குறித்தும் நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.
டி ராஜேந்தர் குறித்து கமல் கூறியது:
அப்போது சிம்புவின் அப்பா டி ராஜேந்தர் குறித்து கமல் கூறியிருந்தது பலருக்கும் ஆச்சரியப்படுத்தியது. அதில் அவர் கூறியது, நான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது என்னை சந்தித்த சிம்புவின் அப்பா டி ராஜேந்தர் வந்திருந்தார். திடீரென்று அவர் என்னை கட்டிப்பிடித்து அழ தொடங்கிவிட்டார். நான் ஏதோ ஒரு மோசமான சம்பவம் நடந்துவிட்டது என நான் நினைத்து விட்டேன். பிறகு தான் என்னால் எப்படி சினிமா இல்லாமல் இருக்க முடியும் என்று நினைத்து தான் அவர் கண்ணீர் விட்டிருக்கிறார் என்று கமல் கூறியிருந்தார்.