“ஒரு வார்டுக்கு இத்தனை கோடி ரூபாய் கேட்கறாங்க, அப்ப ஜெயிச்சா எவ்ளோ சம்பாதிப்பாங்க?”- டி.ராஜேந்தர் கேள்வி.

0
264
tr
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் திகழ்ந்தவர் டி ராஜேந்தர். இவரை தெரியாதவர் யாரும் இருக்கமாட்டார்கள். இன்றைய இளைஞர்கள் மத்தியிலும் இவர் பிரபலம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரின் புகழ் ஓங்கி இருக்கிறது. இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அதோடு இவர் அரசியலில் குதிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அண்ணாவின் நினைவு நாள், தன்னுடைய மகன் சிலம்பரசன் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாவின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து தனது லட்சிய திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் மாவட்ட செயலாளரை சந்தித்து இருக்கிறார் டி ராஜேந்திரன். அதுமட்டுமில்லாமல் இவர் சிம்புவின் ரசிகர் மன்றத்தினர் சார்பாக நடந்த ரத்ததான முகாமிற்கு சென்று இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு டி ராஜேந்தர் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் அரசியல் குறித்து கூறி இருப்பது, 1967இல் வீழ்த்த முடியாத காங்கிரசை வீழ்த்தி காட்டியவர் பேரறிஞர் அண்ணா. அவர் எந்த லட்சியத்திற்காக வாழ்ந்தாரோ? அந்த லட்சியம் காப்பாற்றப்பட்டதா என்றால் கேள்விக்குறியாகத்தான்? இருக்கிறது. அண்ணா தன் குடும்பத்திற்காக எந்த சொத்தும் சேர்க்கவில்லை. சொல்லப்போனால் அவர் தன் குடும்பத்தை வாழ வைக்க இல்லை. அரசியல் மூலம் குடும்பத்திற்காக கோடி கோடியாய் சேர்க்கவும் இல்லை.

- Advertisement -

எம்ஜிஆர் குறித்து டி ராஜேந்தர் கூறியது:

அதேபோல் எம்ஜிஆருக்கு வாரிசு இல்லை என்றாலும் அவர் பெயரில் உள்ள சொத்துக்களை வாய் பேசாத, காது கேட்காத குழந்தைகளுக்கு எழுதி வைத்து விட்டு சென்றவர். ஒரு காலத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தபோது அவரை நான் எதிர்த்தவன். அவர் ஆட்சியில் இருந்தபோது அவரை நான் பார்த்த கோணமே வேறு என்று சொல்லலாம். அதோடு நான் எதை வேண்டுமானாலும் இழப்பேன். ஆனால், என் லட்சியத்தை இன்றுவரை இழந்ததில்லை. தற்போது தமிழக உள்ளாட்சி தேர்தலில் நான் நிற்க வேண்டும் என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். நான் ஒன்று கேட்கிறேன், பொங்கலுக்கு கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் எல்லாம் மூடப்பட்டன.

அரசங்கத்தின் கொள்ளைகளை விமர்சித்த டி.ராஜேந்திரர்:

ஆனால், டாஸ்மாக் கடைகள் மட்டும் திறந்திருந்தன. இது என்னடா கொள்கை? எங்கே பார்த்தாலும் ஓமிக்ரான் வந்துவிட்டது என்று சொல்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் எல்லாம் வேலைக்கு போக முடியாமல் சாப்பாடு இல்லாமல் துடிக்கிறார்கள். இதெல்லாம் பார்க்க வேதனையாக இருக்கு. ஆனால், உள்ளாட்சி தேர்தல் என்று சொன்னவுடன் தமிழ்நாட்டில் எல்லாமே திறக்கப்பட்டிருக்கு. இப்போ தமிழ்நாட்டை விட்டு ஓமிக்ரான் சென்று விட்டதா? இல்லை தமிழ்நாட்டுக்கு வர மாட்டோம் வெளியூருக்கு செல்கிறோம் என்று உத்தரவாதம் கொடுத்து விட்டு சென்றதா? யோசியுங்கள் மக்களே.

-விளம்பரம்-

உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையானது:

தற்போது சமூக வலைத்தள காலம். மக்கள் எல்லாம் வாட்ஸ் அப்பில் கேள்வி கேட்கிறார்கள். அப்போது ஒருவர் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வார்டு செயலாளர் நிக்கணும் என்றால் ஒன்றரை கோடி ரூபாய் வைக்கணும் சார் என்று சொல்கிறார். அதுவும் நான் திமுகவின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் எனக்கு இதைச் சொல்கிறார்கள். ஒரு வார்டு செயலாளருக்கு ஒன்றரை கோடி செலவு பண்ணினா? எத்தனை கோடி அவன் சம்பாதிப்பது. யார் கிட்ட இருந்து பணம் எடுப்பார்கள்? அது யாருடைய பணம் என்று பார்த்தால் இது எல்லாமே மக்களுடைய வரிப் பணம் தான்.

தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கம் மக்களுக்கு செய்தது:

அதேபோல் பொங்கல் பரிசுப் பொருள் கொடுத்ததில் தரம் இல்லை என்கிறார்கள். 5,000 ரூபாய் தரேன், 2500 தரேன்னு சொன்னிங்களே ஏன் தரலை? என்று மக்கள் கேட்கிறார்கள். நீட் தேர்வை ரத்து பண்ணனும்ன்னு சொன்னீங்களே ஏன் பண்ணவில்லை? ஒரு வாரத்துக்கு ஒன்றரை கோடி செலவு பண்றவங்க இருக்கலாம். பணம் படைத்தவராக இருக்கலாம், சம்பாதிப்பவர்கள் இருக்கலாம். அந்த மாதிரி மாவட்ட செயலாளர்கள் உங்களுக்கு வேண்டாம். அண்ணாவின் நினைவு நாள், என் மகன் சிலம்பரசன் பிறந்த நாள். அவர் மாநாட்டில் ஒரு ஸ்டேஜுக்கு கொண்டு வந்து நிறுத்தி அவர் அவருடைய வழியில் சென்று கொண்டிருக்கிறார். ரசிகர் மன்றம் வேறு வழியில் போகிறது.

அடுத்த வருடம் செய்ய வேண்டிய மாற்றம்:

ஆகவே அடுத்த வருட அண்ணாவின் பிறந்த நாள் வரை ஓராண்டு இருக்கிறது. அதற்குள் கட்சியின் கட்டமைப்பை வளர்த்து வாருங்கள். இன்னும் இரண்டு ஆண்டு காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை அப்போது சொல்கிறேன். ஆனால், எனக்கு பதவி நோக்கம் எனக்கு கிடையாது என்று டி ஆர் ராஜேந்திரன் கூறி இருக்கிறார். இப்படி இவர் பேசியிருக்கும் கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ஒரு வேளை இவர் அரசியலுக்கு வருவதற்கான அடித்தளம் போடுகிறாரா? என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Advertisement