டி.ராஜேந்திரனின் கார் மோதியதால் அநியாயமாக உயிர் இழந்த ஊனமுற்ற நபர் – பதற வைக்கும் சிசிடிவி காட்சி- வீடியோ இதோ.

0
585
tr
- Advertisement -

சாலையின் குறுக்கே சென்றவர் மீது நடிகரும், இயக்குனருமான டி ராஜேந்திரன் கார் ஏறியதால் சம்பவ இடத்திலேயே அநியாயமாக அந்த நபர் உயிரிழந்த சிசிடிவி காட்சி சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் டி ராஜேந்தர். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட இயக்குனர், நடிகர், இசை கலைஞர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். அதோடு டி ராஜேந்தர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அந்த அளவிற்கு பல திறமைகளைக் கொண்டவர். மேலும், டி ராஜேந்தர் அவர்கள் திரை உலகில் பல சாதனைகளை செய்து உள்ளார்.

-விளம்பரம்-
T Rajendar Latest Press Meet | டி ராஜேந்திரன்

அதிலும் இவருடைய படத்தில் இடம் பெரும் அடுக்குமொழி வசனம் இவரை விட்டால் வேறு யாருக்கும் வராது. அந்த அளவிற்கு அடுக்குமொழி வசனத்தில் தனித்துவம் பெற்றவர். கடைசியாக இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளி வந்த கவண் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. தற்போது இவர் ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இவருடைய மூத்த மகன் சிலம்பரசனும் தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக தொடங்கி தற்போது முன்னணி நடிகராக புகழ் பெற்று வருகிறார்.

- Advertisement -

சிம்புவின் திரைப்பயணம்:

சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து சிம்பு பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் சிம்பு தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

அநியாயமாக உயிர் இழந்த முதியவர்:

இந்நிலையில் சாலையின் குறுக்கே சென்ற நபர் மீது டி ராஜேந்தரின் கார் ஏறியதால் சம்பவ இடத்திலேயே அந்த நபர் அநியாயமாக உயிரிழந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. சென்னை தேனாம்பேட்டை இளங்கோ சாலையில் தவழ்ந்தபடி முனுசாமி என்ற 50 வயதுடைய நபர் சாலையை கடக்க முயன்றார். இவர் தனியார் நிறுவன காவலாளி ஆவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

-விளம்பரம்-

டி ராஜேந்திரன் கார் மோதி விபத்து:

அதனால் தான் அவர் தவழ்ந்தபடி சாலையை கடக்க முயன்றிருக்கிறார். அப்போது அவர் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த டி ராஜேந்திரனின் சொந்தமான கார் ஒன்று அவர் மீது ஏறி உள்ளது. அந்த நபர் சம்பவ இடத்திலேயே படு காயங்களுடன் அநியாயமாக உயிர் இழந்து உள்ளார். மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதையடுத்து எல்லோருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. விபத்து நடந்த போது காரில் டி ராஜேந்திரன் குடும்பத்தினர் இருந்ததாகவும்,

கைதான டி.ராஜேந்திரன் ஓட்டுனர்:

விபத்தை ஏற்படுத்தியது டி ராஜேந்திரன் ஓட்டுநர் செல்வம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் செல்வம் மீது பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தற்போது இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு சிம்பு மற்றும் டி ராஜேந்தர் தரப்பில் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement