‘இந்த ஆம்பள உடம்புக்கு சொந்தக்காரி டாப்ஸியாதான் இருக்கும்’ கேலி செய்தவருக்கு டாப்ஸி கொடுத்த நச் பதில்.

0
2309
taapsee
- Advertisement -

இந்தியாவின் முன்னணி நடிகை டாப்சி நடித்து இருக்கும் இந்தி படம் தற்போது தமிழில் ரீமேக் ஆக இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. ஆடுகளம் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் டாப்ஸி. அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அதிலும் இவர் சமீபகாலமாக இந்தி மொழியில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை டாப்ஸி அவர்கள் ’ராஷ்மி ராக்கெட்’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை அகர்ஷ் குரானா இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் கதையை தமிழ் இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இருக்கிறார். மேலும், இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. கொரோனா காலத்தில் இருந்து பல பிரபலங்களின் படங்கள் ஓடிடி தளத்தில் தான் வெளியாகி வருகிறது. அந்த வகையில் நடிகை டாப்ஸியின் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சமீபத்தில் தான் டாப்ஸி நடித்த ஹசீனா தில்ரூபா திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. பின் சில தினங்களுக்கு முன் டாப்ஸி நடித்த அனபெல் சேதுபதி நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது அக்டோபர் 15-ஆம் தேதி டாப்ஸி நடித்துள்ள ராஷ்மி ராக்கெட் திரைப்படம் ஜீ5 ஊட்டியில் வெளியாக இருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்காக டாப்ஸி உடற்பயிற்சி செய்து போது எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதை ஒரு ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து இது யார் என்று கண்டுபிடியுங்கள் என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு ட்விட்டர் வாசி ஒருவர் இந்த ஆம்பள உடம்பு நிச்சயம் டாப்ஸி உடையது தான் இருக்கும் என்று கேலியாக கமெண்ட் செய்திருந்தார்.

-விளம்பரம்-
image

இதற்கு பதில் அளித்த டாப்சி உங்களிடம் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான் இந்த வார்த்தையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் 23ஆம் தேதி வரை காத்திருங்கள். மேலும், உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. ஏனென்றால் இதுபோன்ற பாராட்டிற்காக தான் நான் மிகவும் கடினமாக உழைத்தேன் என்று கூறியுள்ளார். டாப்ஸியின் இந்த கூல் பதில் பலரை கவர்ந்து இருக்கிறது.

Advertisement