தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை டாப்ஸி. தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும்,தமிழ் தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.
இறுதியாக தமிழில் ‘காஞ்சனா 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை என்றாலும் அம்மணி இந்தியில் படு பேமஸ். இவர் நடித்த பல்வேறு ஹிந்தி படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது. தற்போது இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் டாப்ஸி.
இதையும் படியுங்க : போட்டோ போட்டால் கலாய்க்காமல் இருக்க ஆல்யா மானஸா செய்த ஐடியா.! உஷாரா இருக்காங்க.!
நடிகை டாப்ஸி பிக் பாஸ் மஹத்தை முதலில் காதலித்தார் ஆனால், சில ஆண்டுகளில் இவர்கள் இருவரது காதல் பிரேக்கப் ஆனது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டாப்ஸியிடம் நடிகர்களில் திருமணம் செய்தால் யாரை திருமணம் செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த டாப்ஸி, வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான, விக்கி கௌஷல் பெயரை கூறி ஷாக் ஆக்கியுள்ளார் டாப்ஸி. நடிகை டாப்ஸி,
விக்கி கௌஷளுடன் இந்தியில் வெளியான ‘மன்மர்சியான்’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.