51 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் போனதுக்கு காரணம் இந்த நடிகர் தான் – பல ஆண்டுகள் கழித்து தபு கொடுத்த ஷாக்.

0
767
tabu
- Advertisement -

இந்திய திரை உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் தபு. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, வங்காளம், மராத்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். 90 காலகட்டத்தில் இவர் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். மேலும், இவர் தமிழில் காதல் தேசம், தாயின்மணிக்கொடி, இருவர், சினேகிதியே போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து இருந்தார். பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து தொடங்கியவுடன் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது தபுவுக்கு 51 வயது ஆகிறது.

-விளம்பரம்-
tabu

இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதுமட்டுமில்லாமல் தபுக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கும் இடையே காதல் இருப்பதாக பல கிசுகிசுக்கள் சோசியல் மீடியாவில் வந்தது. பின் இவர்கள் மத்தியில் காதல் முடிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை தபு அவர்கள் தான் திருமணம் செய்யாது இருப்பதற்கான காரணத்தை தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு திருமணம் நடக்காமல் போனதற்கு இந்தி நடிகர் அஜய் தேவ்கான் தான் காரணம்.

- Advertisement -

எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அஜய் தேவ்கான் பற்றி அதிகம் தெரியும். எனது சகோதரனுக்கு அவர் நெருங்கிய நண்பர். நாங்கள் மும்பை ஜூஹூ பகுதியில் வசித்து இருந்தோம். அப்போது எனது ஒவ்வொரு செயலையும் அஜய் தேவ்கான் கவனித்துக் கொண்டே இருப்பார். நான் எங்கு சென்றாலும் என் பின் தொடர்ந்து வருவார். நான் என்ன செய்கிறேன் என்று கவனித்துக் கொண்டே இருப்பார். அதுமட்டுமில்லாமல் நான் எந்த பயனுடன் பேசுவதும் அவருக்கு பிடிக்காது. பின் அந்த பையனோடு அவர் சண்டை போடுவார்.

அதனால் தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் அப்படியே இருந்து விட்டேன் என்று கூறியுள்ளார். இப்படி தபு கூறிய பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், அஜய் தேவ்கான் மற்றும் தபு இருவரும் சேர்ந்து விஜய் பத், கோல் மேன் அகெய்ன், திரிஷ்யம் போன்ற பல படங்களில் நடித்து உள்ளனர் . அதுமட்டும் இல்லாமல் அஜய் தேவ்கான் மற்றும் நடிகை கஜோல் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தபுவின் இந்த விளக்கத்திற்கு அஜய் தேவ்கான் இடமிருந்து என்ன பதில் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement