இனி ஜீ தமிழ் சேனலை கேபிள் டிவியில் பார்க்க முடியாது. சோகத்தில் சீரியல் ரசிகர்கள். காரணம் இது தான்.

0
48603
zee-tamil
- Advertisement -

தொலைக்காட்சியில் சீரியல்களை பார்க்க கேபிள் மூலம் ஒளிபரப்புவார்கள். கேபிள் மூலம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜீ தமிழ் சேனல் தற்போது துண்டித்து விட்டார்கள். ஏன்? என்ன காரணம்? என்பதற்கான காரணத்தை ஜீ தமிழ் நிர்வாகம் விளக்கியுள்ளது. தற்போதெல்லாம் வெள்ளித்திரைக்கு சென்று படங்களை பார்ப்பவர்கள் விட சின்னத்திரை சீரியல்கள் பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் தான் அதிகமாக உள்ளது. அதிலும் ஒவ்வொரு சேனல்களும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல் முதலிடத்தை பெறுவதற்காக பல தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் பல சூப்பர் ஹிட் சீரியல்களை ஒளிபரப்பாகி வருகின்றன.

Image result for zee tamil

- Advertisement -

சில நாட்களாகவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நிறுத்தி விடுகிறார்கள். இதனால் பல பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. முழுவதுமாக கட்டணம் கட்டியும் கேபிள் ஒளிபரப்பாளர்கள் ஜீ தமிழை துண்டித்து விடுகின்றன. இதனால் கிராமப்புறங்களில் எல்லாம் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. என்ன காரணத்தினால் இப்படி எல்லாம் நடக்கிறது? என்று ஜீ தமிழ் சேனல் நிர்வாகம் இதற்கு பதில் அளித்து உள்ளார்கள். அவர்கள் கூறியது, ஜீ தமிழில் செம்பருத்திலிருந்து தொடங்கி பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. ஜீ தமிழ் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் எல்லாம் கிராமப்புறங்களில் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஆனால், திடீரென்று அங்கிருந்து எங்களுக்கு புகார் வந்து கொண்டே இருக்கிறது.

அது என்னவென்றால், மக்கள் எங்கள் சேனலுக்குக்கான பணத்தை கட்டியும் அவர்களுக்கு எங்கள் சேனலில் இருந்து ஒளிபரப்பாகும் சீரியல்கள் பார்க்க முடியாதபடி அரசு கேபிள் உட்பட பல நிறுவனங்கள் கட் செய்து விடுகிறார்கள். மேலும், ட்ராய் விதிமுறையின் படி மிகவும் குறைவான கட்டணம் வசூல் செய்து வருகிறது எங்களுடைய ஜீ தமிழ் குழுமம். இந்த நிலையில் சேனல் தரப்பிலிருந்து எங்களிடமிருந்து நிகழ்ச்சிகளை வாங்கி எம்.எஸ்ஓக்கள் தான் மக்களுக்கு ஒளிபரப்பு செய்வார்கள். சமீபகாலமாகவே எங்களுக்கும், நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யும் எம்.எஸ்.ஓக்களுக்கும் இடையே கட்டணம் தொடர்பாக பிரச்சனை நடந்து கொண்டிருக்கின்றது. நாங்கள் 30 சதவிகிதம் கட்டணத்தை சேனல் தரப்பிலிருந்து வழங்கி வந்தோம். ஆனால், கூடுதலாக வேண்டும் என்று ஒளிபரப்பு செய்கிறவர்கள் எங்களிடம் கேட்கிறார்கள்.

-விளம்பரம்-
ஜீ தமிழ் நிர்வாகத்தினர்
ஜீ தமிழ் நிர்வாகத்தினர்

இப்படி இவர்கள் கேட்கும் போது நாங்கள் இன்னும் கட்டணத்தை அதிகரித்தால் மட்டும் தான் எங்களால் அவர்கள் கேட்கிற பணத்தை கொடுக்க முடியும். இல்லை என்றால் எங்களுக்கு நஷ்டம் தான் ஆகும். இந்த விஷயத்தை அவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டுக்கிறார்கள். இப்படி கட்டணம் உயர்த்தும் விஷயத்தில் அரசு கேபிள் நிறுவனம் உடன் சுமங்கலி கேபிள் விஷன், வி கே டிஜிட்டல் நிறுவனங்களும் சேர்ந்து உள்ளார்கள். இதனால் எங்களையும் தர சொல்லி கேட்கிறார்கள். மற்ற கேபிள் நிறுவனங்கள் இது குறித்து எந்த ஒரு குற்றச்சாட்டும் வைக்கவில்லை.

முதலில் இது சம்பந்தமாக அரசு கேபிள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் எங்களுக்கு இணைப்பு கொடுப்பதாக நம்பிக்கை கொடுத்து இருந்தார்கள். பிறகு அவர்கள் அலுவலகத்தில் இல்லை என்ற தகவலை எங்களுக்கு பின்னர் தான் தந்தார்கள். இந்த பிரச்சனையை நீண்டு கொண்டு தான் போகிறது. இதற்கு அரசாங்கம் தான் ஒரு நல்ல தீர்ப்பு கூற வேண்டும் என்று கூறினார்கள். எனவே, இந்த பஞ்சாயத்து முடிந்தால் தான் வழக்கம் போல ஜீ தமிழ் தொலைக்காட்சியை கேபிள் டிவியில் பார்க்க முடியும் இல்லை என்றால் செட்டாப் பாக்ஸ் தான் வைக்க வேண்டும்.

Advertisement