15 வயசுல நான் நடிக்க வந்தப்போ- தமன்னா சொன்ன ஷாக்கிங் சீக்ரட்.

0
3626
tamanna
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தமன்னா. இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். நடிகை தமன்னா நடிப்பில் கடைசியாக வெளி வந்த தமிழ் திரைப்படம் ‘ஆக்ஷன்’. கதையின் நாயகனாக விஷால் நடித்திருந்த இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-
Veerudokkade Movie - Kallu Kallu Promo Song || Ajith, Tamanna ...

இதனைத் தொடர்ந்து ‘சரிலேறு நீகேவ்வறு’ என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ‘டாங் டாங்’ என்ற பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார் தமன்னா. இப்போது ஹிந்தியில் ‘போலே சுடியன், தட் இஸ் மகாலக்ஷ்மி’ மற்றும் தெலுங்கில்
‘சீட்டிமார்’ என மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் நடிகை தமன்னாவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்நிலையில், நடிகை தமன்னா அளித்த பேட்டி ஒன்றில் “2005-ஆம் ஆண்டு வெளி வந்த ஹிந்தி திரைப்படம் ‘சந்த் சா ரோஷன் சேஹ்ரா’. இது தான் நான் ஹீரோயினாக அறிமுகமான முதல் படம். அப்போது எனக்கு வயது 15 தான். அப்போதெல்லாம் எனக்கு நடிப்பில் பெரிய அனுபவம் இல்லை. எனக்கு யாரை அணுகி எப்படி படத்தில் நடிக்க ஒப்பந்தமாவது என்று கூட தெரியாது. திடீரென ஒரு வாய்ப்பு என்னை தேடி வந்தது, நானும் ஒப்புக் கொண்டேன்.

அஜித் சாருடன் ‘வீரம்’ படத்தில் நடித்தபோது, ஒவ்வொரு காட்சி ஷூட் செய்வதற்கு முன்பும் அவர் இயக்குநர் சிவா சார் சொல்வதை பொறுமையாக கேட்பார். அஜித் சார் ரொம்பவும் எளிமையான நபர். என்னிடம் திரையுலகில் யாரை போல் முன்னணி நட்சத்திரமாக வலம் வர வேண்டும் என உங்களுக்கு ஆசை என்று கேட்டால், நான் அஜித் சார் மாதிரின்னு தான் சொல்லுவேன்” என்று தமன்னா தெரிவித்திருக்கிறார்.

Advertisement