தமன்னா குடும்பத்தையும் விட்டுவைக்காத கொரோனா – ரெண்டு பேருக்கும் பாதிப்பாம்

0
779
tamanna
- Advertisement -

இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன், அபிஷேக் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆகிய நான்கு பேருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகி வீடு திரும்பினர்.அதே போல தமிழ் சினிமாவில் நடிகர் விஷால், நடிகர் கருணாஸ், நடிகை நிக்கி கல்ராணி, பாடகர் எஸ் பி பி போன்ற பலர் கொரோனா தாக்கத்திற்கு ஆளாகினர்.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் கருணாஸ் கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்த நிலையில் எஸ் பி பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான தமன்னாவின் குடும்பத்தையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. நடிகை தமன்னாவின் அம்மா மற்றும் அப்பா இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

https://www.instagram.com/p/CEWMw01pGKO/

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகை தமன்னா, கடந்த வார இறுதியில் என்னுடைய பெற்றோர்களுக்கு மிதமான கொரோனா அறிகுறி இருந்தது. முன்னெச்சரிக்கை காரணமாக வீட்டில் உள்ள அனைவருமே பரிசோதனைக்காக சென்றிருந்தோம். தற்போதுதான் பரிசோதனை முடிவுகள் வெளியானது. எதிர்பாராத விதமாக என்னுடைய பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. என் பெற்றோர்களை தவிர நான் மற்றும் வீட்டில் வேலை செய்யும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை

-விளம்பரம்-
Advertisement