இந்த பிரபல நடிகையின் பயோபிக்கில் நடிக்க தான் ஆசை, ஆனா அது நடக்காது- மனம் திறந்த நடிகை தமன்னா

0
144
- Advertisement -

பயோபிக் படத்தில் நடிப்பது தொடர்பாக நடிகை தமன்னா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தமன்னா. இவர் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணன் நடித்த கேடி படத்தின் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சியமானவர். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் ஹிந்தி படங்களில் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். இடைப்பட்ட காலங்களில் இவருக்கு வலம் வாய்ப்புகள் சரியாக அமையாமல் இருந்தது. பின் பிரபாஸின் பாகுபலி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகை தமன்னா பிசியாக படங்களில் நடித்துப் வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘அரண்மனை 4’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

- Advertisement -

தமன்னா திரைப்பயணம்:

அதோடு இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது. அரண்மனை 4 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை தமன்னா ஹிந்தியில் வேதா, ஸ்ட்ரீ 2 மற்றும் தெலுங்கில் ஓடெலா 2 போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு சமீப காலமாகவே தமன்னா அவர்கள் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி வருகிறார். அந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்கிடையில் தமன்னா அவர்கள் விஜய் வர்மா என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியானது.

தமன்னா குறித்த தகவல்:

கடந்த 2023 ஆம் ஆண்டு தமன்னா- விஜய் வர்மா இணைந்து நடித்த வெப் தொடர் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்-2’. இதன் மூலம் தான் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பின் இருவரும் சேர்ந்து காதலிப்பதாக தகவல் வெளியாகிருந்தது. இவர்கள் இருவருமே சில வருடங்களாக டேட்டிங் செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. பின் இவர்கள் இருவருமே காதலை வெளிப்படையாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

தமன்னா காதல்:

அதற்குப்பின் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. பின் தமன்னா தன்னுடைய காதலை முறித்து கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருவரும் பிரிந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஷாக்கை கொடுத்திருக்கிறது. ஆனால், இது தொடர்பாக தமன்னா- விஜய் வர்மா தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலுமே உறுதியாகவில்லை.

பயோபிக் படம்:

இந்த நிலையில் பயோபிக் படத்தில் நடிப்பது தொடர்பாக நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை. ஆனால், அது கண்டிப்பாக நடக்கவே நடக்காது என்று எனக்கே தெரியும். காரணம், மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தன்னுடைய மனைவி ஸ்ரீதேவியின் பயோபிக்கை எப்போதுமே எடுக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். ஒருவேளை அவர் அனுமதித்தால் கண்டிப்பாக ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement