தமிழ் படங்களில் உள்ள முக்கியமான கவனிக்கத்தக்க தவறுகளை நாங்கள் உங்களுக்கு தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். தற்போது அவற்றில் ஒரு பாகமாக சில படங்களின் 10 தவறுகளை எடுத்து தொகுத்துள்ளோம்.

1. மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் சூரியா மற்றும் பிரேம்ஜி இருவரும் ஒரு ஹைவேயில் நின்று பேசிக்கொண்டு இருப்பார்கள். அதில், பிரேம்ஜி பேசும் போது லாங் ஷாட்டில் ரோட்டின் ஓரமாக ரோட்டின் மேலே நின்று பேசுவார். ஆனால் அவரை க்ளோஸ் அப்பில் காட்டும் போது, அவர் பின்னால் சைடில் ரோடு இருக்காது. மேலும் அவர் ரோட்டை தாண்டி வெளியே மண்ணில் நின்று பேசுவது போல இருக்கும்

Advertisement

இதே சீனில் இன்னொரு மிஸ்டேக் என்னவென்றால், பிரேம்ஜி பேசும் போது முதலில் ரோட்டின் ஓரத்தில் கட்டப்பட்டிருக்கும் அந்த இரும்பு தடுப்பான் மீது சாய்ந்து பேசுவார். ஆனால் அதே சீனில் வேற ஷாட்டில் ஒரு தடுப்பு சுவர் மீது அமர்ந்து பேசுவார்.

Advertisement

Advertisement

2.ரஜினி முருகன் படத்தில் ஆடி வாங்க செல்லும் சிவா மற்றும் சூரி ஆகிய இருவரும் ஷோரும் உள்ளே இருக்கும் போது பார்த்து வைத்த காரின் சீட் கலரும், பின்னர் எடுத்து ஓட்டி செல்லும் அதே காரின் சீட் கலரும் வேறு வேறாக இருக்கும்


3.இயக்குனர் ஏ.எல் விஜயின் சகோதரர் உதயா நடித்த ஆதிகுமாரன் படத்தில் அவர் கையில் இருக்கும் பேப்பர் முதல் ஷாட்டில் ஆரஞ்சு கலராகவும் பின்னர் அடுத்த ஷாட்டில் சிவப்பு கலந்த பிங்க் கலராகவும் மாறிவிடும்.

4.தசாவதாரம் படத்தில் சிலையை தூக்கிவிட்டு அசினோடு எஸ்க்கேப் ஆகும் கமல் ஒரு தள்ளு வண்டியில் போவார். அதில் முதல் சீனிலேயே அந்த வண்டியில் இருக்கும் அனைத்து பழங்களும் கீழே விழுந்துவிடும். ஆனால் அடுத்த சீனில் போகும்போது அதில் நிறைய பழங்கள் வைத்துவிடுவார்கள்.


5.குஷி படத்தில் அப்பாவும் மகளும் சண்டை போடும் போது, அந்த சுவற்றில் மாட்டி இருக்கும் ப்ரேம் போட்டோ அடுத்த ஷாட்டில் காணாமல் போய்விடும்.


6.ஆதவன் படத்தில் வடிவேலுவிற்கு பிரிட்ஜில் இருந்து குதிக்கும் முன்னர் இரண்டு கால்களும் நன்றாக கட்டப்பட்டிருக்கும். ஆனால், குதித்தவுடன் தலைகீழாக தொங்கும் வடிவேலுவிற்கு ஒரு கால் தான் கட்டப்பட்டிருக்கும்.


7.மான் கராத்தே படத்தின் பைனல் பாக்சிங் போட்டியின் போது சிவாவின் எதிராளி ஸ்டேஜுக்குள் வரும் போது முதல் சீனில் இன்னர் பனியன் அணிந்திருக்க மாட்டார். ஆனால், சரியாக உள்ளே வரும் போது பனியன் அணிந்துவிடுவார்.


8.அனேகன் படத்தில் தனது ஆபீசில் பேசிக்கொண்டிருக்கும் போது தனது உடையில் சன் க்ளாஸ் மாட்டியிருப்பார். வெளியே வரும் போது அது காணாமல் போய்விடும்.


9.ஆம்பள படத்தில் விஷாலும் ஹன்சிகாவும் வீடியோ சேட்டிங் செய்து கொண்டிருப்பார்கள். அப்போது, ஹன்சிகா எந்த ஒரு நகையும் அணிந்திருக்க மாட்டார். ஆனால் விஷாலின் போனில் தெரியும் ஹன்சிகா கழுத்தில் நகை அணிந்திருப்பார்.


10.திருடன் போலீஸ் படத்தில் மொட்டை ராஜேந்திரன் போன் பேசினாலும் அவரது போன் டிஸ்பிளே ஸ்டான்பையில் இருக்கும்.

Advertisement