வடிவேல் பாலாஜி இறந்த அதே மருத்துவமனையில் உயிரிழந்த கயல் பட நடிகர்.

0
1638
florent
- Advertisement -

இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் நடிகர் விஷால், நடிகர் கருணாஸ், நடிகை நிக்கி கல்ராணி, பாடகர் எஸ் பி பி போன்ற பலர் கொரோனா தாக்கத்திற்கு ஆளாகினர். இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகர் ஃப்ளோரன்ட் பெரைரா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென உடல்நிலை மோசமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் காலமாகியுள்ளார். இதே மருத்துவமனையில் தான் வடிவேல் பாலாஜியும் கடந்த சில நாட்களுக்கு முன் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் ஃப்ளோரன்ட் பெரைரா, விஜய் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான புதிய கீதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆனால் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பிரபுசாலமன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கயல் படம் தான். இந்த படத்தில் கயல் ஆனந்தி தந்தையாக நடித்து இருந்தார். இவர் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஜி.எம் என்பது ஸ்பெஷல் தகவல்.

கும்பகோணத்தை சேர்ந்த இவர் 1995 ஆம் ஆண்டு விழாவை தொலைக்காட்சியில் சேர்ந்தார் அதன்பின்னர் கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்துவிட்டார். தமிழ் தொலைக்காட்சி வரலாறு 23 ஆண்டுகள் தான் அதில் இவர் 22 வருடமாக தொலைக்காட்சியில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது இறப்பிற்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

Advertisement