500 படங்களுக்கு மேல் நடித்தும் அரசு மருத்துவமனையில் குள்ளமணி எப்படி இறந்தார் தெரியுமா ?

0
3438
kullamani
- Advertisement -

சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள் எல்லாம் தங்களுடைய கடைசி காலத்தில் அனாதையாக, யாரும் இல்லாத நிலையில் இறந்து உள்ளார்கள். இது சமீப காலமாகவே நீடித்து வருகிறது. மேலும், பல நடிகைகள், நடிகர்கள் எல்லோரும் இந்த மாதிரி கோர நிகழ்வுகளினால் தான் இறந்து உள்ளார்கள். அதிலும் சினிமாவில் படங்களில் துணை நடிகர்களாக நடிப்பவர்களின் நிலைமை தான் மிகவும் மோசமாக உள்ளது. அவர்களுக்கு சினிமாவிலும் பெரிய அளவு ஊதியம் கிடைப்பதில்லை, நிஜ வாழ்க்கையிலும் பெரிய அளவு மரியாதை கிடைப்பதில்லை. அந்த வகையில் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் தான் நடிகர் குள்ளமணி.

-விளம்பரம்-
Image result for actor kullamani death

இவரது இறப்பிற்கான காரணம் மற்றும் இவர் இறந்த போது நேர்ந்த சம்பவம் பற்றி பலர் அறியாத ஒன்று. நடிகர் குள்ளமணி அவர்கள் ரஜினி, கமல் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து உள்ளார்.500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த குள்ள மணிக்கு பல படங்களில் இருந்து சம்பளம் கூட வந்தது கிடையாது. அந்த பணம் கிடைத்து இருந்தால் கூட அவருடைய வாழ்க்கை நன்றாக இருந்திருக்கலாம் என்று உடன் இருந்தவர்கள் கூறி இருந்தார்களாம்.

- Advertisement -

கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் குள்ளமணி அவர்களுக்கு கிட்னி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இவரை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்கள். பின் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையிலேயே இறந்து உள்ளார். அப்போது இவரை நேரில் சென்று பார்த்த ஒரே நடிகர் சரத்குமார் மட்டும் தான் என்று கூறப்படுகிறது. ஆனால், இவருடைய மறைவுக்கு கூட சினிமாவில் சில முக்கிய பிரபலங்கள் எட்டி கூட பார்க்கவில்லை என்கின்றனர். இவருக்கு ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

This image has an empty alt attribute; its file name is 1-21.jpg

சினிமா உலகில் ஐந்து படங்களில் நடித்தாலே கோடிக் கணக்கில் பணத்தில் பிரளுவார்கள் நடிகர்கள். அதே சினிமா உலகில் 500 படங்களுக்கு மேல் நடித்து கடைசி வரை சிரமப்படுபவர்களும் உள்ளார்கள். இது மிகப் பெரிய கொடுமையான விஷயம். சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் மட்டும் தான் தங்களுடைய வாழ்க்கையில் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், குள்ள மணி போல பலர் கேட்பார்றற்று தான் இறந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement