ஆர்யா முதல் சூரி வரை – ஹோட்டல் வைத்து ஸைட் வருமானம் பார்த்து வரும் தமிழ் சினிமா நடிகர்கள். இதோ புகைப்படங்கள்.

0
873
hotels
- Advertisement -

பொதுவாகவே நடிகர், நடிகைகள் படங்களில் நடிப்பதை தாண்டி சொந்தமாக தொழில் செய்து வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதில் நடிகைகள் சினிமாவில் நடிப்பதை விட ரியல் எஸ்டேட் தொழில், சொந்தமாக ஆடைகளின் ஆன்லைன், வியாபாரம், நகை கடை, அழகுசாதன பொருட்கள் என்று பல தொழில்கள் செய்து வருகின்றனர். நடிகர்களும், நடிகைகளுக்கு இணையாக இல்லை என்றாலும் சொந்தமாக தொழில் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-

அப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் சிலர் சொந்தமாக உணவகம் திறந்துள்ளனர். அந்த நடிகர்களின் பட்டியல் இதோ,

- Advertisement -

கருணாஸ்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்பவர் கருணாஸ். இவர் தமிழ் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழக அரசியல் ஆவார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ’நந்தா’ என்ற படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதன் பின்னர் கருணாஸ் அவர்கள் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து உள்ளார். இவர் சாலிகிராமத்தில் கருணாஸ் நான் என்ற பெயரில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார்.

இதையும் பாருங்க : 7 ஆண்டு இன்ஸ்ட்டா பாலோவர், மார்பிங் புகைப்படங்கள் – காதலிக்க மறுத்ததால் இளைஞர் செய்த செயல். கண்டுபித்து கைது செய்த போலீசார்.

-விளம்பரம்-

ஆர்.கே.சுரேஷ்:

தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் ஆர்கே சுரேஷ். இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தவர். பின் பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரா தப்பட்டை’ விஷால் நடிப்பில் வெளியான ‘மருது’ போன்ற படத்தில் வில்லனாக ஆர்கே சுரேஷ் மிரட்டி இருக்கிறார். தற்போது இவர் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இவர் கேகே நகரில் சாப்பிடலாம் வாங்க என்ற உணவகம் நடத்துகிறார்.

ஆர்யா:

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆர்யா திகழ்ந்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. அதிலும் சமீபத்தில் இவர் நடித்த சார்பேட்டா பரம்பரை படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்ததுடன் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் ஆர்யா. அதனை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இவர் அண்ணாநகரில் Sea Shell என்ற பெயரில் ஹோட்டல் வைத்துள்ளார்.

சூரி:

தமிழ் சினிமா உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும், நடிகர் சூரி மதுரையில் தொடர்ந்து அம்மா உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் திறந்து வருவது நமக்கே நன்கு தெரிந்த ஒன்று. இவர் தி நகரில் கூட அம்மா உணவகம் வைத்துள்ளார்.

ஜீவா:

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜீவா. இவர் ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதை தொடர்ந்து இவர் ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, ரௌத்திரம், நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த 83 என்ற படத்தில் ஜீவா நடித்து இருந்தார். இவர் தி நகரில் One Mb என்ற பெயரில் உணவகம் ஒன்று நடத்துகிறார்.

Advertisement