7 ஆண்டு இன்ஸ்ட்டா பாலோவர், மார்பிங் புகைப்படங்கள் – காதலிக்க மறுத்ததால் இளைஞர் செய்த செயல். கண்டுபித்து கைது செய்த போலீசார்.

0
169
Katreena
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகையான கத்ரினாவிற்கும், பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலும் நீண்டநாள் காதலித்து கொண்டிருந்ததையடுத்து, இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி இவர்களது திருமணம் பஞ்சாபி முறைப்படி ராஜஸ்தான் மாநிலம் மாதோப்பூர் மாவட்டத்தின் பர்வாராவில் அமைந்துள்ள சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் அன்று (9/12/2021) பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் இவர்கள் இருவரின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும், சில திரைப் பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-
Actress Katrina Kaif

நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் கத்ரீனா கைஃப் மற்றும் அவரது கணவர் விக்கி கவுஷல் இவர்களுக்கு சமூக ஊடகம் வழியாக ஒரு நபர் மிரட்டல் விடுத்துள்ளார். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விக்கி புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் அடையாளம் தெரியாத அந்த நம்பர் மீது மிரட்டல் மற்றும் பின் தொடர்வது ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அதிகாரி ஒருவர், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளோம் அந்த நபரை பற்றி கூடுதல் விவரங்களை பெற முயற்சிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் சல்மான்கானுக்கும் கொலை மிரட்டல் :-

மும்பையின் பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் பகுதியில் நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கான் கடந்த மாதம் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக பூங்காவில் உள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்துள்ளார்.அங்கு ஒரு கடிதம் இருந்தது. உடனே அதை எடுத்து சலீம் கான் படித்துள்ளார். அப்போது அந்த கடிதத்தில் தனக்கும் தனது மகன் சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சலீம் கான், கடிதத்தை மகனிடம் கொண்டு போய் காண்பித்துள்ளார். அந்த கடிதத்தில் ‘சலீம் கான், சல்மான் கான் இருவரும் சித்து மூஸ்வாலாவை போல் கொல்லப்படுவீர்கள் என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து இருவரும் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். லைசன்ஸ் உடன் துப்பாக்கி வேண்டும் என விண்ணப்பித்தள்ளார்.

கொலை மிரட்டல் விட்ட நபர் கண்டுபிடித்த போலீஸ் :-

நடிகை கத்ரீனா கைஃப், அவர் கணவர் விக்கி கெளஷலுக்குக் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக மன்வேந்திர சிங் (30) என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இன்ஸ்டாகிராம் மூலம் இந்தக் கொலை மிரட்டலை விடுத்துவந்த அந்த நபர், சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துவருகிறார். கத்ரீனாவின் கணவர் விக்கி கொடுத்த புகாரில் கைதுசெய்யப்பட்ட சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டதில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய போலீஸார், நடிகை கத்ரீனா கைஃப் சினிமாவில் நுழைந்ததிலிருந்தே அவரை சிங் பின்தொடர்ந்து வந்திருக்கிறார். அதோடு கத்ரீனாவுடன் தான் இருக்கும் வகையில் போலிப் புகைப்படங்களை உருவாக்கி அடிக்கடி சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாகக்கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

தனக்கும் கத்ரீனா கைஃப்கும் திருமணம் என பத்திரிக்கை அடித்தாராம் :-

கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி கத்ரீனா கைஃப் திருமணமானவுடன் பொறாமையில் அதே மாதத்தில் 13-ம் தேதி தனக்கும் கத்ரீனாவுக்கும் திருமணம் என்று கூறி, சிங் திருமண அழைப்பிதழை சமூக வலைதளத்தில் வெளியிட்டதோடு, இருவரும் திருமணம் செய்துகொண்டது போன்ற போலி புகைப்படங்களையும் வெளியிட்டார். புகைப்படங்களில் கத்ரீனா கைஃப்பை தன் மனைவி என்றே சமூக வலைதளங்களில் குறிப்பிட ஆரம்பித்தார். காதலர் தினத்தன்றும் கத்ரீனா கைஃப்புடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை கத்ரீனா, விக்கி இருவருக்கும் அனுப்பியிருக்கிறார்.

கத்ரீனா கைஃப் மீது ஒரு தலைகாதல் :-

ஏழு ஆண்டுகள் கத்ரீனா கைஃப்பை ஒரு தலையாக காதலித்து வந்தார் . அவருக்கு திருமணம் ஆனாவூடன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் சிங், விக்கிக்கு அனுப்பியிருக்கும் செய்தியில், தான் கத்ரீனாவைத் திருமணம் செய்துகொண்டதாகவும், அவரிடமிருந்து விலகியிருக்கும்படியும், இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார். விக்கி-கத்ரீனா கைஃப் திருமணத்துக்குப் பிறகு கத்ரீனாவின் திருமணம் போலியானது என்றும், ஏழு ஆண்டு உறவை மறைக்க இப்படிச் செய்திருக்கிறார்கள் என்றும் இன்ஸ்டாகிராமில் சிங் ஒரு செய்தி வெளியிட்டார். சிங் ஒரு சைக்கோ. அவர் கத்ரீனாமீது பைத்தியமாக இருக்கிறார். அவரைக் கைதுசெய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். சிங், நடிகை கத்ரீனா கைஃப் வீட்டுக்கு அருகில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement