ஃபேக் பிளாஷ் பேக் கொண்ட தமிழ் படங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த விஜய்யின் லியோ படம் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. லியோ படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் லியோ குறித்து வரும் பிளாஷ் பேக் காட்சிகள் போலியானது என்ற புதிய உருட்டினை விஜய் ரசிகர்கள் உருட்டி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ்.

Advertisement

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒருவேளை லியோ கதாபாத்திரத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் போலியாக கூட இருக்கலாம் என்று கூறியிருந்தார். இதனால் சோசியல் மீடியா முழுவதும் லியோ படத்தின் ஃபேக் ஃபிளாஷ் பேக் குறித்த செய்திகள் தான் அதிகமாக வைரலாகி கொண்டு வருகிறது. இதை எடுத்து இயக்குனர் லோகே கனகராஜ், லியோவில் உண்மையான கதையை பார்த்திபன் தன்னுடைய கண்ணோட்டத்தில் சொல்லவே இல்லை. அது ஹிருதயராஜின் சொன்ன கதை. படத்தில் இருந்து ஏதாவது சொல்லும்போது கதை முழுக்க முழுக்க அவருடைய கண்ணோட்டத்தில் இருந்ததாக ஒரு டயலாக் வரும்.

லியோ:

ஆனால், எடிட்டர் ஃபிலோவுடன் நடந்த வாக்குவாதத்தில் அந்த டயலாக்கை நீக்கிவிட்டேன். உண்மையில் ஃபிளாஷ்பேக் காட்சிகள் 40 நிமிடங்கள் இருந்தது. ஆனால், அது படத்தில் வரவில்லை என்று கூறியிருந்தார். பின் பட குழுவும், ‘இருதயராஜ்’ பாத்திரம், “இது என் பார்வை மட்டுமே” என்று சொல்லும் டெலீட் செய்யப்பட்ட காட்சி ஒன்றை ஸ்பெஷலாகப் பகிர்ந்து இருக்கின்றார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ஃபேக் பிளாஷ் பேக் கொண்ட படங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் டெம்ப்லேட்டுகளாக வைரலாகி வருகிறது.

Advertisement

வாலி:

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்கனாக திகழ்ந்தவர் எஸ் ஜே சூர்யா. இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ஒன்று தான் வாலி. இந்த படத்தில் அஜித், சிம்ரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் அஜித், சிம்ரன் இடம் தன்னுடைய பிரேக் அப் ஆன கதையை சொல்லுவார். அது முழுக்க முழுக்க ஒரு பொய்யான கதை தான். ஆனால், அதை சொல்லும் போது படத்தில் காட்சியாக காண்பித்து இருந்தார்கள்.

Advertisement

மன்மதன்:

ஏஜே முருகன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த படம் மன்மதன். இந்த படத்தில் ஜோதிகா, கவுண்டமணி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் மன்மதன் என்ற பெயரில் தொடர்ந்து சிம்பு பெண்களை கொலை செய்து வருவார். பின் போலீஸ் அவரை கைது செய்து விடும். அப்போது சிம்பு, இதை எல்லாம் என்னுடைய சகோதரன் செய்கிறான் என்று ஒரு பொய்யான பிளாஷ்பேக்கை சொல்லுவார்.படத்தில் இறுதியில் அந்த பிளாஷ்பேக் பொய் என்பதை போல் காண்பித்து இருப்பார்கள்.

பீட்சா:

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த படம் பீட்சா. இந்த படம் முழுக்க முழுக்க திகில் கதைகளத்தை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு பொய்யான பேய் கதையை தன்னுடைய முதலாளியிடம் சொல்லி இருப்பார்.

இசை:

எஸ் ஜே சூர்யா இயக்கி நடித்த படத்தில் ஒன்று இசை. இந்த படம் 2015 ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது. இந்த படத்தின் மூலம் எஸ் ஜே சூர்யா மீண்டும் கம்பேக் கொடுத்திருந்தார் என்று சொல்லலாம். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா கனவு காண்பது போல கொண்டு வந்திருப்பார்கள். இறுதியில் அந்த படம் முழுக்க முழுக்க கனவு என்பதைப் போல காண்பித்திருப்பார்கள்.
இப்படி இப்படி தமிழ் சினிமாவில் ஏராளமான ஃபேக் பிளாஷ் பேக் கொண்ட படங்கள் இருக்கிறது.

Advertisement