தமிழில் பல நடிகைகள் கோலோச்சி நடித்திருந்தாலும் பெரும்பாலான நடிகைகள் பக்கத்து மாநிலத்தை சேர்ந்தவர்களே. அவர்களுக்கு சரியாக தமிழ் வராததாலும், நல்ல குரல் வளம் இல்லை என்பாதாலும் அவர்களுக்கு டப்பிங் பேச வேறு சில நடிகைகள் தான் பயன்படுகின்றனர். அப்படி தமிழ் நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்கள் விவரம் இதோ :
1.மருது படத்தில் ஸ்ரீதிவ்யாவிற்கு டப்பிங் பேசியது விலாசிணி.
2.ரெக்க படத்தில் லட்சுமி மேனனுக்கும், ராஜா ராணி மற்றும் தனி ஒருவன் படத்தில் நயன்தாரவிற்கும் டப்பிங் கொடுத்தது தீபா வெங்கட்.
3.அதேபோல் காதல் தேசம் திரைபடத்தில் நடிகை தபுவிற்கு வாய்ஸ் கொடுத்தது, நடிகை சரிதா தான்.
4.அதேபோல் வேட்டையாடு விளையாடு படத்தில் ஜோதிகாவிற்கும், இருவர், குரு, ராவணன் உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா ராய்க்கும் வாய்ஸ் கொடுத்தது நடிகை ரோகினி தான்.
5.தெய்வதிருமகள் படத்தில் அமலபாலுக்கு டப்பிங் கொடுத்தது சவிதா ரெட்டி. இவர் நயன்தாரா, ஜோதிகா, திரிஷா, தமன்னா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் செய்து கொடுத்துள்ளார்.
6.விஜயின் தெறி படத்தில் ஏமி ஜாக்சனுக்கு டப்பிங் கொடுத்தது ரவீனா ரவி. மேலும், கணிதன் திரைபடத்தில் கேத்ரின் தெரசாவிற்கு இவர் தான் வாய்ஸ் கொடுத்துள்ளார்.
7.மங்காத்தா திரைபடத்தில் லட்சுமி ராய்க்கு வாய்ஸ் கொடுத்தது சுச்சி லீக்ஸ் பாடகி சுசித்ரா. மேலும் ஷ்ரேயாவிற்கும் இவர் தான் வாய்ஸ் கொடுக்கிறார்.
8.சூர்யாவின் 24 திரைப்படத்தில் சமந்விற்கும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவிற்கும் வாய்ஸ் கொடுத்தது பாடகி சின்மயி தான்.
9. பாகுபலி படத்தில் தமன்னாவுக்கு வாய்ஸ் கொடுத்தது மானசி, மேலும் கொடி படத்தில் திரிஷா , பிந்து மாதவி, தமன்னா ஆகியோருக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார்