இந்த ஒரு காரணத்தால்தான் நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல – நடிகை அம்மு

0
2120
Ammu

விஜய் தொலைக்காட்சி ‘தமிழ்க் கடவுள் முருகன்’ சீரியலில் சரஸ்வதியாக நடித்துவருகிறார் அம்மு. பல வருடங்களாக சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்துவருபவரை, அவருடைய வீட்டில் சந்தித்தோம். கிச்சனில் காய்களை நறுக்கிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.
Ammu Ramachandranகிட்டத்தட்ட 10 வருஷமா நடிச்சிட்டிருக்கேன். நல்லா சாப்பிடுவேன், நல்லா தூங்குவேன். அதுமட்டுமில்லாம, நான் பரதநாட்டிய டான்சர் என்பதால், உடம்பு அப்படியே மெயின்டெயின் ஆயிட்டிருக்கு. எல்லாத்துக்கும் மேல, என் அப்பா, அம்மா, அண்ணன், தங்கச்சி என்னோட ஹேப்பி ஃபேமிலி எனக்கு பெரிய சப்போர்ட்.

திருமணம் செய்வதை தள்ளிப்போடுவதற்கு என்ன காரணம்?

எனக்குத் திருமணம் பண்ணிக்கணும்னு இப்போ வரைக்கும் தோணவே இல்ல. அதுமட்டுமில்லாம ஒருத்தரைப் பார்க்கும் போது, நம்மளுடைய மனசுல எதாவது ஒரு மூலையில ஒரு பல்பு எரியணும். எனக்கு அப்படி எதுவும் நடக்கல. அதுக்காக லவ் மேரேஜ்தான் பண்ணிப்பீங்களானு கேட்காதீங்க.
ammu ramachindranஅப்படியெல்லாம் எந்தக் கொள்கையும் கிடையாது. எனக்கு நிரந்தர உறவு வேணும். எல்லோரும் சொல்றதுக்காகக் கல்யாணம் பண்ணிகிட்டு பிடிக்கலைனு விவாகரத்துப் பண்றதுல எனக்கு உடன்பாடு இல்ல. என்னைப் புரிஞ்சிகிட்டு என்னுடைய சுக, துக்கங்களைப் பங்கிட்டுகொள்கிற மாதிரி ஒரு நல்ல மனிதருக்காகத்தான் காத்துட்டு இருக்கேன்.