தமிழ் நாடுனாவே ரஜினி, சாம்பார் சாதம், ஐயர் தானா – பாலிவுட் பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்.

0
45514
bollywood

தற்போது நெட்பிளிக்சிஸ் புதிதாக வந்து உள்ள ‘மீனாட்சி சுந்தரேஸ்வர்’ படத்தின் டீசரை குறித்த தமிழ் ரசிகர்கள் பல்வேறு விதமாக கண்டனங்களை தெரிவித்தும், விமர்சித்தும் வருகிறார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கரண் ஜோகர் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்துள்ள டீஸர் தான் மீனாட்சி சுந்தரேஸ்வர் படம். இந்த படத்தில் Sanya Malhothra and Abhimanyu Dassani நடித்துள்ளார்கள். இந்த படம் முழுக்க முழுக்க காதல் நகைச்சுவை கதையை மையமாகக் கொண்டது.

மேலும், இந்த படம் ஹாலிவுட் படமாக இருந்தாலும் இந்த படத்தின் கதை தமிழ் கலாச்சாரத்தை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது. இந்த திரைப்படம் உறவுகள், கூட்டுக் குடும்பம், திருமணம், காதல், வாழ்க்கையில் ஏற்படும் தடுமாற்றம் பல்வேறு பிரச்சினைகள் என அனைத்துமே உள்ளடக்கி இருக்கிறது.

- Advertisement -

இந்த படம் தமிழ்நாட்டின் மதுரையை பின்னணியாக கொண்டது. படத்தில் ஹீரோ ஒரு பொறியாளராக இருக்கிறார். பின் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.இவர்கள் ஹீரோ ஹீரோயின் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் திருமணமான தம்பதிகளின் வாழ்க்கையில் நடக்கும் இன்பம் துன்பம் எல்லாத்தையும் தெளிவாக காட்டியிருக்கிறார்.

இந்நிலையில் டீசரில் தலைவர் ரஜினிகாந்தை வைத்து ஒரு பாடலும், கதாநாயகி உங்களுக்கு ரஜினிகாந்த் பிடிக்குமா என்று கேட்டதற்கு இல்லை எனக்கு பிடிக்காது என்று ஹீரோ சொன்னவுடன் அவருடைய முகம் மாறும் காட்சியில் டீசர் முடிகிறது. தற்போது இந்த டீசர் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

இதைப்பார்த்த தமிழ் ரசிகர்கள் ‘தமிழ்நாடு என்றாலே ரஜினிகாந்த், இட்லி சாம்பார், மல்லிகை பூ, பிராமின் இவர்கள் மட்டும் தான் இருப்பார்களா’ வேற யாரும் இல்லையா என்று வன்மையாக கண்டித்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

பொதுவாகவே பாலிவுட் திரைப்படங்களில் ரஜினிகாந்தை பற்றி மட்டும் தான் பேசுகிறீர்கள். தயவு செஞ்சு திருந்துங்கடா என்றும் கொந்தளித்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். தற்போது இந்த டீஸர் குறித்த கமெண்ட் சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement