அந்த உன்னதமான மனிதருக்கு இந்த சூழ்நிலை வரும்போது கஷ்டமாக உள்ளது- நேரில் இருந்த டாக்டரின் கண்ணீர் வீடியோ.

0
1332
doctor
- Advertisement -

கடந்த இரண்டு மதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு உலக நாடுகளை பாதித்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,601 ஆகவும், 590 பேர் பலியாகியும் உள்ளார்கள். நாளுக்கு நாள் ஒட்டுமொத்த உலகமும் கொரோவினால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார்.

-விளம்பரம்-
மருத்துவர் சைமன்

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவராக இருந்து வந்த நபர் கடந்த சில தினங்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பெற்று வந்த அந்த மருத்துவர் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தன. கொரோனா தாக்கத்தால் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அவர் உயிரிழந்தார்.

- Advertisement -

அவருடைய உடலை அடக்கம் பண்ணுவதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. இது குறித்து இந்த சம்பவத்தை நேரில் பார்த்த டாக்டர் பாக்யராஜ் அவர்கள் கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சைமன் சார் இறந்து விட்டார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்த உடனேயே அவரை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நாங்கள் செய்ய தொடங்கினோம். அவர் உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே அந்த இடத்திற்கு 250 பேருக்கு மேல் வந்து அடக்கம் பண்ண கூடாது என்று போராட்டம் செய்தார்கள்.

அப்புறம் சுகாதாரத் துறையில் இருந்து வந்து எங்களிடம் ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டு என்ன செய்வது என்று யோசனை செய்யுங்கள் என்று கூறினார்கள். டாக்டர் சைமன் அவர்கள் கிருத்துவர் என்பதனால் அவர் கிறிஸ்தவர் கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதி வாங்கி வந்தோம். ஆனால், இப்போது அங்கு அடக்கம் செய்ய முடியாது என்பதால் வேறு எங்காவது ஒரு இடத்தில் அடக்கம் பண்ணுங்கள் என்று சொல்லுங்கள். நாங்களும் சரி எங்க இருந்தாலும் அவரை நல்லபடியாக அடக்கம் பண்ண வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கமாக இருந்தது.

-விளம்பரம்-

கடைசியாக ஒரு இடத்தில் அடக்கம் பண்ணுவதற்கு நாங்கள் எல்லா ஏற்பாடும் செய்தோம். திடீரென்று அந்த இடத்திற்கு ஒருவர் வந்து யாரோ கொரோனாவால் இறந்தவரை அடக்கம் பண்றாங்க என்று சத்தம் போட்டார். பின் அந்த இடத்தில் பல பேர் சூழ்ந்து கொண்டு அடக்கம் பண்ண கூடாது எங்கள் மீது கற்களை எறிய ஆரம்பித்துவிட்டார்கள். சார் உடலை குழிக்குள் இறங்கிக் கொண்டிருக்கும் போது தான் அவர்கள் எல்லாம் எங்கள் மீது கற்களை வீசி அடித்துக் கொண்டிருந்தார்கள். பின் நாங்கள் அவரை நல்லபடியாக அடக்கம் பண்ணி விட்டோம். ஆனால், அங்கிருந்த மக்கள் சார் உடலை வெளியே எடுத்து வேறு எங்காவது அடக்கம் பண்ண கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

அதுக்கப்புறம் இரவு இரண்டு மணிக்கு மேல் தான் அவருடைய உடலை நாங்கள் அடக்கம் பண்ணோம். டாக்டர் சைமன் அவர்கள் உயிரோடு இருக்கும் போது நிறைய உதவிகளை செய்துள்ளார். அவர் ஒரு சாதாரண மனிதர் கிடையாது. அவர் சர்வதேச அளவில் பிரபலமான மருத்துவர். இந்த உன்னதமான மனிதருக்கு இந்த சூழ்நிலை வரும்போது கஷ்டமாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் அவருடைய உடலின் மீது கற்கள் விழும் போது எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எங்களை பொறுத்தவரை கடவுளுக்கு அடுத்தபடியாக இருப்பது டாக்டர் சைமன் தான். அப்படிப்பட்ட நபருக்கு இந்த மாதிரியா என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

இவர் ஏழை மக்களுக்கு இலவசமாக பல சர்ஜரி செய்து உள்ளார். மேலும், இறந்துபோன உடலில் எப்போதுமே வைரஸ் இருக்காது. இதை ஏன் தான் மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களோ என்று தெரியவில்லை. மனிதநேயமே இல்லாமல் போய்விட்டதோ என்று கவலையாக உள்ளது. மக்களுக்காக சேவை செய்கிற மருத்துவர்களை இந்த நிலைமை என்றால் ஒரு சாதாரண மக்கள் இறந்து போனால் என்ன நடக்குமோ என்று எனக்கு தெரியவில்லை. மருத்துவர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்துப் போராடி இருக்கிறவர்களை எப்படி மதிக்க வேண்டும். ஆனால், அவர்களை ரொம்ப இழிவாக நடத்துகிறார்கள். இனிமேல் ஒரு மருத்துவமனையில் உள்ள கடைநிலை ஊழியர்களுக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது. அவர்கள் மதிக்கப்படவேண்டும். அரசாங்கம் அதற்கான முயற்சி எடுக்க வேண்டும். அரசு மரியாதையுடன் அவர்கள் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்று கூறினார்.

Advertisement