தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகனாக தமிழ் சினிமாவை வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். “கட்டப்பா” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்பக்கம் கட்டிப் போட்டவர் சத்யராஜ். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாகி இருந்தார். அதனை அடுத்து இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து இருந்தார்.
மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.
இவர் ஆரம்பத்தில் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தார். தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பிரபாஸின் பாகுபலி படத்தின் மூலம் இவர் மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சத்யராஜ் பேட்டி :
இந்நிலையில் தான் சத்யராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அந்த பேட்டியில் தான் சிறுவயதில் கல்லூரிக்கு கட்டடித்தது விட்டு சினிமா பார்க்க சென்ற அனுப்பதை பற்றி பேசியிருந்தார். சத்தியராஜ் கூறியதாவது ” தற்போது டிலைட் தியேட்டர் என்று இருக்கும் திரையரங்கம் அப்போது வெரைட்டி ஹால் தியேட்டர் என்று சொல்லப்படும். இந்த தியேட்டரின் உரிமையாளரான சாமிக்கண்ணு வினென்ட் என்னுடைய அம்மாவழி தாத்தாவின் நெருங்கிய நண்பர். என்னுடைய தாத்தா 1920களில் லண்டனின் தான் படித்தார்.
மாட்டுக்கார வேலன் படம் :
நான் என்னுடைய 10 வயதில் இருந்து அந்த தியேட்டருக்கு சென்று வருகிறேன். அங்கு நான் முதன் முதலில் பார்த்த படம் ” பெரிய இடத்துப் பெண்” என்ற படம் தான் என நினைக்கிறன். ஒருமுறை பொங்கல் பண்டிகையின் போது எம்.ஜி ஆர் நடித்த “மாட்டுக்கார வேலன்” என்ற திரைப்படம் வெளியாகியது. இந்த படம் ஹிந்தியில் வெளியான “ஜிகிரி தோய்ஸ்த்” என்ற படத்தின் ரீமேக். அந்த ஹிந்தி படத்தில் மும்தாஜ் போன்றவர்கள் நடித்திருந்தனர். வெரைட்டி தியேட்டரில் அவ்வப்போது ஹிந்தி படம் வெளியாவதுண்டு. அப்படித்தான் “மாட்டுக்கார வேலன்” வெளியாவதர்க்கு முன்னரே “ஜிகிரி தோஸ்த்” திரைப்படம் வெளியானது.
கோவை மக்கள் கொண்டாடினார்கள் :
அப்போது நானும் என்னுடை நண்பர்களும் இந்த படத்தை பார்த்துவிட்டுத்தான் “மாட்டுக்கார வேலன்” படத்தை எடுத்திருகின்றனர். எனவே இதனை பார்த்தே ஆகவேண்டும் என அனைவரும் அந்த படத்திற்கு சென்றிருந்தோம். படத்திற்கு அவ்வளவு கூட்டம் வந்திருந்தது. அந்த படத்தில் நடித்த ஜிதேந்திராவை எம்.ஜி.ஆராகவே மக்கள் பார்த்து ரசித்தனர். ஒருவேளை அந்த காட்சியை ஜிதேந்திரா பார்த்திருந்தால் அடப்பாவிகளா கோவை மக்கள் எந்த அளவிற்கு என்னை கொண்டாடுகின்றனர் என்று அசந்து போயிருப்பார். அப்படி பட்ட அனுபவம் எனக்கு அந்த தியேட்டரில் கிடைத்து.
அதெல்லாம் ஒரு காலம் :
பின்னர் “என்டர் தி ட்ராகன்” படம் அந்த தியேட்டரில் வெளியானது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த தியேட்டர் பக்கத்திலேயே கராத்தே பயிற்சி சொல்லிக்கொடுத்தனர். அதனை கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன், நான் காரேத்த பயிற்சியை மறந்தாலும் அந்த தியேட்டருக்குள் வருவதை மறக்கவில்லை . நான் படிக்கும் காலகட்டத்தில் கல்லூரியை கட் அடித்துவிட்டு படம் பார்க்க வருவது சுலம். ஒரு சைக்கிள் இருந்தால் போதும் சில நிமிடத்தில் தியேட்டருக்கு வந்து விடலாம். அதெல்லாம் ஒரு காலம் என தன்னுடைய கல்லூரி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டார் நடிகர் சத்யராஜ்.