2021 ரிவைண்ட் : ‘இனி இவருக்கு பதில் இவர்’ சீரியல்களில் இந்த ஆண்டு அரங்கேறிய டாப் 10 ஆர்டிஸ்ட் மாற்றங்கள்.

0
1039
serials
- Advertisement -

பொதுவாகவே சின்னத்திரையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நடிகர்கள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சீரியல்கள் இருந்து பல கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டிருக்கிறது. தற்போது இதை பற்றி தான் இணையதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2001 ஆம் ஆண்டில் சின்னத்திரையில் மாற்றப்பட்ட மற்றும் சீரியலில் இருந்து விலகிய நடிகர்களின் தொகுப்பு என்று rewind 2021 வெளியாகியுள்ளது. இதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

-விளம்பரம்-
 விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும்  சீரியலில் ஐஸ்வர்யா ரோலில் நடித்தவர் விஜே ஐஸ்வர்யா.சீரியலில் இவரின் அறிமுகத்திற்கு பின்பு கண்ணனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு கதையின் போக்கு மாறியது. ஐஸ்வர்யாவுக்கும் கண்ணனுக்கு கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க்கவுட் ஆக இணையத்தில் இந்த ஜோடி வைரலானது. கண்ணன் - ஐஸ்வர்யா கல்யாண நிகழ்வுகள் டி.ஆர்.பியை எகிற வைத்தன. இந்நிலையில் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் ஐஸ்வர்யா மாற்றப்பட்டு இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சாய் காயத்ரி ஐஸ்வர்யாகாவ நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. முகப்பரு காரணத்துக்காக இந்த மாற்றம் நிகழ்ந்ததாக ஐஸ்வர்யா கொடுத்த பேட்டி சர்ச்சையாக வெடித்து இணையத்தில் விவாத பொருளானது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

பாண்டியன் ஸ்டோர்ஸ்: விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் விஜே ஐஸ்வர்யா நடித்து இருந்தார். சீரியலில் இவருடைய அறிமுகத்திற்கு பின்பு தான் கண்ணனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று சொல்லும். இவர்கள் திருமணத்திற்குப் பிறகு தான் சீரியலில் டிஆர்பி எகிறியது. இந்த நிலையில் எதிர்பார்க்காத நேரத்தில் ஐஸ்வர்யா மாற்றப்பட்டு ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடித்து வருகிறார். இவர் வெளியேறியதற்கு காரணம் அவருடைய முகப்பரு என்று கூறினார்கள்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி வகிக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரோஷினி. மூன்று வருடங்களாக இந்த சீரியலில் இவர் நடித்து வந்தார். கடந்த மாதம் சினிமா வாய்ப்பு காரணமாக இவர் சீரியல் இருந்து விலகி இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பின்பு இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவி நடித்து வருகிறார்.

 விஜய் டிவியின் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்தவர் நடிகை ரோஷினி. 3 வருடங்களாக தொடர்ந்து இந்த சீரியலில் இவர் நடித்து வந்தார். கடந்த மாதம் திடீரென்று இந்த சீரியலில் இருந்து விலகி அதிர்ச்சி தந்தார். பின்பு சீரியல் குழு வினுஷா தேவியை கண்ணம்மாவாக அறிமுகப்படுத்தியது. தற்போது அவரே தான் சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வருகிறார். ரோஷினியின் விலகலை ரசிகர்களால் எற்றுக் கொள்ளமுடியவில்லை. அவரை மிஸ் செய்வதாக இணையத்தில் ஏகப்பட்ட போஸ்டுகள் வைரலாகின.

பாக்கியலட்சுமி:

இல்லத்தரசிகளின் பேவரைட் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிகை ஜெனிஃபர் நடித்திருந்தார். இவர் திடீரென்று இந்த சீரியலில் இருந்து விலகினார். இதனால் இவருக்கு பதிலாக பிக்பாஸ் புகழ் ரேஷ்மா நடித்து வருகிறார். இந்த சீரியலில் இருந்து ஜெனிபர் விலகியதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகவும் அதில் ஒன்று அவர் கர்ப்பமாக இருந்ததும், அடுத்து ராதிகா கதாபாத்திரம் நெகட்டிவாக மாறுவது அவருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். ஆரம்பத்தில் ஜெனிஃபர் கதாபாத்திரத்தில் ரேஷ்மாவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தற்போது ரேஷ்மா தன்னுடைய நடிப்பால் மக்களை கவர்ந்து வருகிறார்.

-விளம்பரம்-
 விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் இல்லத்தரசிகளின் ஃபேவரெட் சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் நடித்தவர் நடிகை ஜெனிஃபர். இவர் திடீரென்று இந்த சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதில் தற்போது பிக் பாஸ் புகழ் ரேஷ்மா அந்த ரோலில் நடித்து வருகிறார்.இந்த சீரியலில் இருந்து விலகியதற்கு ஜெனிஃபர் தரப்பில் இரண்டு காரணங்கள் கூறப்பட்டது. ஒன்று அவர் கர்ப்பமாக இருந்தது, அடுத்தது ராதிகா ரோல் நெகட்டிவாக மாறுவது பிடிக்கவில்லை என்று. ஜெனிஃபர் இடத்தில் ரேஷ்மாவை ஆரம்பத்தில் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது ரேஷ்மா தனது நடிப்பால் ராதிகா ரோலை ஃபுல் ஃபில் செய்து வருகிறார்.

காற்றுக்கென்ன வேலி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இளைஞர்களின் சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியலில் சூர்யா கதாபாத்திரத்தில் தர்சன் நடித்திருந்தார். பின் திடீரென சீரியலில் இருந்து இவர் விலகினார். இதனால் ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து இருந்தார்கள். தற்போது சூர்யா கதாபாத்திரத்தில் சுவாமிநாதன் நடித்து வருகிறார். இவருக்கு இதுதான் தமிழில் முதல் சீரியல். கொஞ்சம் கொஞ்சமாக தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.

 விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் இளைஞர்களின் ஃபேவரெட் சீரியலான காற்றுக்கென்ன வேலி சீரியலில் சூர்யாவாக நடித்த தர்ஷன் திடீரென்று சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் உள்ளனர்.. தர்ஷன் சீரியலில் இருந்து விலக பல காரணங்கள் கூறப்பட்டது. தற்போது இந்த சீரியலில் சூர்யாவாக கன்னட நடிகர் சுவாமிநாதன் நடித்து வருகிறார். இவருக்கு தமிழில் இது முதல் சிரியல். ஆனால் தர்ஷன் ஏற்கனவே அரண்மனை கிளி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

5.செம்பருத்தி:

சின்னத்திரை வரலாற்றிலேயே பல சாதனைகள் செய்த சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. 5 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் ஒன் சீரியலாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆதி-பார்வதி ஜோடிக்கு இன்றும் மக்கள் மத்தியில் வரவேற்பு குறையவில்லை. இந்த சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்திருந்தார். பின் தன்னுடைய தனிப்பட்ட காரணங்களால் திடீரென அந்த சீரியலில் வெளியேறினார். அவருக்கு பதில் யூடியூப் பிரபலம் அக்னி நடித்து வருகிறார்.

 சின்னத்திரை வரலாற்றிலே பல சாதனைகளை செய்த செம்பருத்தி சீரியல் 5 ஆண்டுகளுக்கு மேலாக நம்பர் 1 வரிசையில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆதி - பார்வதி ஜோடிக்கு மிகப் பெரிய அளவில் ரீச் உள்ளது. இந்நிலையில் பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக திடீரென்று இந்த சீரியலில் ஆதியாக நடித்து வந்த கார்த்திக் மாற்றப்பட்டார். தற்போது அவருக்கு பதில் யூடியூப் பிரபலம் அகினி ஆதியாக நடித்து வருகிறார்.

நாம் இருவர் நமக்கு இருவர் 2:

விஜய் டிவியில் மிகப் பிரபலமான சீரியலில் ஒன்று தான் நாம் இருவர் நமக்கு இருவர் 2. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் மகாலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ரக்ஷிதா நடித்திருந்தார். இவர் பல்வேறு காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது மகாலட்சுமி கதாபாத்திரத்தில் அரண்மனைக்கிளி ஜானு நடித்து வருகிறார்.

 விஜய் டிவி சீரியலில் 2 ஆவது பாகம் தொடர்வது வழக்கமான ஒன்று. சரவணன் மீனாட்சி, கனா காணும் காலங்கள் போன்ற தொடர்கள் சீசன், சீசன்களாக தொடர்ந்தனர். அந்த வரிசையில் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியல் தொடங்கப்பட்டது இதில் மகாலட்சுமி ரோலில் நடிகை ரச்சிதா நடித்து வந்தார். இந்நிலையில் பல்வேறு காரணங்களால் அவர் சீரியலில் இருந்து விலக தற்போது அந்த ரோலில் அரண்மனை கிளி ஜானு நடித்து வருகிறார்.

பூவே உனக்காக:

பிக்பாஸ் டிஆர்பியை பின்னுக்கு தள்ளி முன்னாடி இருக்கும் புகழைக் கொண்டு ஒளிபரப்பாகும் சீரியல் தான் பூவே உனக்காக. இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடிகர் அருண் நடித்து வந்தார். இவர் சில மாதங்களுக்கு முன்பு சீரியலை விட்டு விலகி இருந்தார். அதனை தொடர்ந்து கதிர் கதாபாத்திரத்தில் விஜய் டிவி புகழ் அசிம் நடித்து வருகிறார். இவர் வந்ததாலோ என்னவோ இந்த சீரியல் டாப் கியரில் சென்று கொண்டிருக்கின்றது.

 பிக் பாஸ் டி.ஆர்.பியை ஓரங்கட்டிய சீரியல் என்ற புகழை கொண்டு ஒளிபரப்பாகும் சன் டிவி  சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடிகர் அருண் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் சில மாதங்களுக்கு முன்பு சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது கதிராக விஜய் டிவி புகழ் அசீம் நடித்து வருகிறார்.

ரோஜா :

சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர் ரோஜா. இந்த தொடரில் வில்லி அனு கதாபாத்திரத்தில் நடிகை ஷாமிலி நடித்து வந்தார். ஷாம்லி கர்ப்பமானதால் சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன்பே விலகினார். அவருக்கு பதில் அணுவாக ரோஜா சீரியலி ல் விஜே அக்ஷயா நடித்து வருகிறார்.

 சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியலில் வில்லி அனு ரோலில் நடிகை ஷாமிலி நடித்து வந்தார். இந்நிலையில் ஷாமிலி கர்ப்பமானதால் சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகினார். அவருக்கு பதில் தற்போது அனுவாக ரோஜா சீரியலில் விஜே அக்‌ஷயா நடித்து வருகிறார்.

வானத்தை போல:

சன் டிவியில் பாச மலர் சீரியலாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவது வானத்தைப்போல. இந்த சீரியல் குறித்து 2 நாட்களாக சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், இந்த சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வேதா வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் இந்த சீரியலில் மான்யா நடித்து வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் புது நடிகை மான்யா மக்கள் மத்தியில் கூடிய விரைவில் இடம் பிடிப்பார்.

Advertisement