சீரியல் நடிகைகளில் டாப்பில் இருப்பது யார் – டாப் 10ல் இடம்பிடித்த புதிய நாயகிகள்.

0
3242
actress
- Advertisement -

மக்களின் பொழுது போக்கு அம்சமாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கின்றன. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு தான் மக்கள் மத்தியில் மவுசு அதிகம் என்று சொல்லலாம். அதிலும் இந்த கொரானா தொடங்கிய காலத்திலிருந்து மக்கள் அனைவருமே தொலைக்காட்சி பக்கம் தான் அதிகம் சென்று விட்டார்கள். அதிலும் சீரியல்களை தான் அதிகம் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் சமீபகாலமாக ஒவ்வொரு சேனலும் தங்கல் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக பல வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை தொகுத்து வழங்கி வருகின்றார்கள். அதே போல் சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்கள். இதனால் தங்கள் ரசிகர்களுக்கு தாங்கள் அடிக்கடி நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியா மூலம் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகின்றனர். இதனால் சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடமே இருக்கு என்று சொல்லலாம். இந்நிலையில் அதிகம் ரசிகர்கள் வைத்திருக்கும் சீரியல் நடிகைகள் யார் என்ற கருத்துக் கணிப்பு தற்போது நடந்துள்ளது. அதற்கான லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

Top 10 Tamil Serials 2021 Week 30 | Top 10 TRP Rating Tamil TV Serials -  YouTube

1.காவியா:

பாரதிகண்ணம்மா சீரியல் இன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

2.ஜாக்லின்:

ரியாலிட்டி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் ஜாக்லின். இவர் தேன்மொழி பிஏ என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்தது.

thenmozhi ba serial on hotstar - Cheap Online Shopping -

3.ஸ்ரேயா:

திருமணம் என்ற சீரியலின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். அதன்பின் விஜய்டிவியில் ஒளிபரப்பான அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து இருந்தார். தற்போது இவர் ரஜினி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

4.ஷபானா:

பார்வதி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன்பக்கம் கவர்ந்தவர் சபானா. ஷபானா செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கின்றார்.

5.ஜனனி:

இவர் நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதற்கு முன் இவர் பல சசீரியல்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

6.சைத்ரா ரெட்டி :

யாரடி நீ மோகினி என்ற சீரியலில் அழகான வில்லியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது இவர் கயல் என்ற சீரியலில் கலக்கிக் கொண்டு வருகிறார்.

7. அர்ச்சனா:

விஜேவாக மீடியாவுக்குள் நுழைந்தவர் அர்ச்சனா. தற்போது இவர் ராஜா ராணி 2 சீரியலில் காமெடி வில்லியாக அசத்திக் கொண்டிருக்கிறார்.

8.ஆஷா கவுடா:

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.அதோடு இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

9.ரேஷ்மா:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ரேஷ்மா. தற்போது இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் என்ற தொடரில் கலக்கிக் கொண்டு வருகிறார்.

10.ரவீனா:

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மௌனராகம் 2 என்ற சீரியலில் லீடு ரோலில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு பல தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement