நேற்றுமாலை ஆன்லைன் பைரஸி குற்றங்கள் தொடர்பாக இணையத்தில் புதுப்படங்களை பதிவேற்றுவது தொடர்பாக கௌரிசங்கர் என்பவர் திருவல்லிக்கேணி காவலர்களால் கைதுசெய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.

ஏப்ரல் மாதம் தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவியேற்றபின்னர் இணையத்தில் புதுப்படங்களை பதிவேற்றிடும் குற்றவாளிகளை பிடிப்பதே தனது முதல் வேலை என்றும் ஆறு மாதத்திற்குள் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்போவதாகவும் விஷால் கூறினார்.

Advertisement

இந்த நிலையில் சொன்னைதை செய்யும் வகையில் நேற்று கெளரிசங்கர் என்ற தமிழ்கன் அட்மின் பிடிபட்டார். முதலில் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் என்று கூறப்பட்டாலும் தற்போது போலீசார் விசாரணையின் பின் அவர் தமிழ்கன் இணையதளத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளது.

சிக்கியது எப்படி?
நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றபின்னர் விஷால் இணையதளத்தில் புதுப்படங்களை வெயிடுபவர்களை சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் அவர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்க முடிவுசெய்தார்.

Advertisement

அதன்படி அதற்கென கணிணி துறையில் பொறியியல் படிப்பு படித்த சிலரை ரகசியமாக நியமித்து நியமித்து குற்றவாளிகளை கண்காணிக்க தொடங்கினார்.அந்த குழுவானது கடந்த சில மாதங்களாக இணையதளங்களில் எந்தெந்த திரைப்படம் எந்தெந்த ஐபி முகவரியில் இருந்து பதிவேற்றம் செய்யப்படுகிறது என்றும் அந்த ஐபி முகவரி எங்கிருந்து செயல்படகின்றது என்றும் கண்டுபிடித்து அந்த தகவல்களுடன் காவல்துறையினரை சந்தித்து முறைப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

Advertisement

அதன்படி காவல்துறை நடவடிக்கையெடுத்து தற்போது கௌரிசங்கரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் தற்போது திரையுலகில் விஷாலுக்கு பலதரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.எங்களின் சார்பிலும் வாழ்த்துகள் விஷால்.

Advertisement