‘சமூக வலைதளத்தில் சாய் பல்லவியின் உருவக் கேலி’ – தனக்கு நடந்த உருவ கேலிகள் குறித்து உருக்கமாக பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்.

0
587
saipallavi
- Advertisement -

என்னை பலர் மோசமான முறையில் உருவ கேலி மற்றும் கிண்டல் செய்திருக்கிறார்கள் என்று தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்துள்ள பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் சாய்பல்லவி. இவர் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தாலும் மலர் டீச்சர் என்ற ரோலின் மூலம் சாய்பல்லவி தென்னிந்திய ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து விட்டார். தமிழில் கஸ்தூரிமான் என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இருந்தாலும் இவர் கதாநாயகியாக இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தியா என்ற படத்தில் தான் நடித்து இருந்தார். அதன் பின் வெளியான மாரி 2, என் ஜி கே போன்ற படங்களில் சாய்பல்லவியின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. இப்படி இவர் தொட்டதெல்லாம் பொன் என்று சொல்லுமளவிற்கு இவர் நடித்தாலே அந்த படம் ஹிட்டாகி வருகிறது. அதிலும் இவர் நடிகை மட்டுமில்லாமல் சிறந்த டான்ஸரும் ஆவார். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமாவுக்குள் நுழைந்தார். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சாய் பல்லவியின் ஷியாம் சிங்கா ராய் படம்:

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இருந்தாலும் இவர் தெலுங்கு மொழியில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ஷியாம் சிங்கா ராய் படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் சாய் பல்லவி தேவதாசி கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக நானி நடித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேஸ்புக் பயனர் ஒருவர் சாய் பல்லவியின் ஷியாம் சிங்கா ராய் பட போட்டோவை பகிர்ந்து அவருடைய உருவத்தை கேலி செய்து போஸ்ட் போட்டு இருந்தார்.

சாய்பல்லவியை விமர்சித்த பயனர்:

அதில் அவர், பல்லவியின் உதடு சரியில்லை, மூக்கு பெரிதாக இருக்கிறது. ஒரு நடிகைக்கு உண்டான வசீகரமான தோற்றம் அவருக்கு இல்லை என்று பல விதமாக சாய்பல்லவியை விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார். இந்த போஸ்ட் இணையம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து சாய்பல்லவியின் தோற்றம் குறித்து இணையத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெரிய விவாதமே நடந்து வருகிறது என்று சொல்லலாம். மேலும், சாய்பல்லவிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சாய்பல்லவி ரசிகர்கள் கொந்தளித்து போய் விமர்சித்த வரை வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-

கொந்தளித்து வெளுத்து வாங்கும் ரசிகர்கள்:

இது ஒரு பக்கமிருக்க, பொதுவாகவே அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று சாய் பல்லவி சொல்லியது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த அளவிற்கு அவர் இயற்கையான தோற்றத்தின் மீது விருப்பம் கொண்டவர். இப்படிப்பட்ட வரை நெட்டிசன்கள் உருவ கேலி, கிண்டல் செய்வது சரியானது அல்ல. முகப்பூச்சு அதிகம் இல்லாத, இயல்பான தோற்றம் கொண்ட பெண்கள் தற்போது சினிமா உலகில் இருப்பது அரிது. அப்படி இருக்கும் சாய் பல்லவியை நெட்டிசன்கள் கேலி செய்த போஸ்ட் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்விற்கு தற்போது தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் இது குறித்து அவர் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

ஆளுநர் தமிழிசை அளித்த பேட்டி:

அதில் அவர் கூறி இருப்பது, நான் உருவத்தை வைத்து தொடுக்கப்பட்ட கேலி கிண்டல்களை மிகத் துணிச்சலாக எதிர்கொண்டு இருக்கிறேன். கேலி கிண்டலுக்கு ஆளாகும் நபர்களுக்குத் தான் மனசு எவ்வளவு காயமடையும் என்று தெரியும். கேலிகளால் நான் காயப்பட்டு இருக்கிறேன். என் திறமையாலும் அதிக முயற்சியாலும், அதிக உழைப்பாலும் தான் நான் அந்த காயங்களை மாற்றினேன். எல்லோரும் பெரிய மகாத்மாக்கள் கிடையாது. யாராவது ஏதாவது சொன்னால் நமது மனது வலிக்கும். மக்கள் சொல்லும் கருத்துக்களை புறந்தள்ளி விட்டு செல்ல முடியாது. சிலரின் கருத்துக்கள் நம்மை மிக ஆழமாக காயப்படுத்தும். சிலர் என்னை உருவ கேலி செய்தபோது அதை புறந்தள்ளிவிட்டு போயிருக்கிறேன். ஆனாலும், பலமுறை அதனால் காயப்பட்டு இருக்கிறேன்.

ஆளுநர் தமிழிசை வாழ்வில் பட்ட கேலி,கிண்டல்:

குள்ளமாக இருப்பது, கருப்பாக இருப்பது, தலைமுடி நன்றாக இல்லாமல் இருப்பது நம்முடைய தவறு கிடையாது. என்னை கூட பரட்டை என்றெல்லாம் கிண்டல் செய்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் அழகு இருக்கிறது. அதனால் தான் பண்டைய காலத்தில் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று கூறினார்கள். பெண்களை தான் இப்படி அதிகம் கேலி செய்து விமர்சிக்கிறார்கள். பெண்கள் முன்னேறுவதை தடுக்க முடியாத சமூகம் அவர்களை காயப்படுத்தி அவர்களின் வேகத்தை தடுப்பதற்கான ஒன்றாக இதை ஒரு ஆயுதமாக கையில் எடுத்து உள்ளார்கள். சாய்பல்லவி மீதான விமர்சனமும் அப்படிப்பட்ட எதிர்மறையான தாக்குதல்கள் தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இப்படி சாய்பல்லவிக்கு ஆதரவாக தமிழிசை பேசியிருக்கும் கருத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.

Advertisement