இதோ ஆரம்பிச்சிட்டாங்க தலைவி தமிழிசை..!அப்போ சர்க்காரும் ஹிட் தான்..!

0
947
Tamilisai
- Advertisement -

இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார்” படம் அடுத்த மாதம் தீபாவளி திருநாளன்று வெளியாகவுள்ளது. மேலும், இந்த படத்தின் டீஸர் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.அக்டோபர் 2 ஆம் தேதி நடந்த இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதை பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வரவேற்பறும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

-விளம்பரம்-

sakar

- Advertisement -

விஜய் அரசியலுக்கு வருவதை குறித்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால், பா ஜ க கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ரானிடம் கேட்ட போது விஜய் பற்றி பேசி “சர்கார்” படத்தை வெற்றி படமாக மாற்ற விருப்பமில்லை என்று கிண்டலாக பதிலித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் படத்திற்கு “சர்கார்” என்று பெயர் வைத்து விட்டு மக்களுக்கு சேவை செய்யுவேன் என்று கூறுகிறார்களே. அப்படியானால் “சர்க்காரே ” எங்கள் கையில் தான் உள்ளது அப்போது நாங்கள் மக்களுக்காக எவ்வளவு உதவிகளை செய்வோம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ஏற்க்னவே கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான “மெர்சல் ” வெளியான போது அதற்கு பா ஜ க கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அதிலும் தமிழிசை தொடர்ந்து இந்த படத்தை குறித்து பேசியதாலே இந்த படத்திற்க்கு மேலும் ஒரு விளம்பரமாக அமைந்த்து என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது “சர்கார்” படம் குறித்தும் தமிழிசை பேச துவங்கியுள்ளதால் இந்த படமும் மெர்சலை போன்றே ஹிட் அடைய போகிறது என்று விஜய் ரசிகர்கள் மீம்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Advertisement