ராஜேந்திர பாலாஜி முதல் எச்.ராஜாவரை – ஜோதிட கணிப்பை பொய்யாக்கிய ஸ்டாலின். வைரலாகும் வீடியோக்கள்.

0
1511
stalin
- Advertisement -

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி மு க மாபெரும் வெற்றிபெற்றதன் மூலம் முதல் முறையாக தமிழக முதலமைச்சராக இன்று காலை 9.10 மணிக்கு பொறுப்பேற்றார் மு க ஸ்டாலின். . தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கண்டனர்.

-விளம்பரம்-

கொரோனா பிரச்சனை காரணமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி கடந்த (மே 2) தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை படு மும்மரமாக நடைபெற்றுது. இதில் ஆரம்பம் முதலே பல்வேறு தொகுதிகளில் தி மு க தான் முன்னிலை வகித்து வந்தது. . இதில், திமுக கூட்டணி 159 இடங்களை கைபற்றியது. திமுக 125 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சின்னத்தில் நின்றவர்கள் 8 பேர் வெற்றி பெற்றதன் மூலம் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்தது.

இதையும் பாருங்க : அடேங்கப்பா, சமந்தா – நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா ?

- Advertisement -

இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதியானது.10 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியில் அமருகிறது.முதல் முறையாக முதலமைச்சராக தனது உறுதி மொழியை ஏற்றுக்கொண்டார் ஸ்டாலின். அப்போது ஸ்டாலின் எனும் நான் என ஆளுநர் சொல்ல, முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்று கூறி ஸ்டாலின் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார். அப்போது துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். யாரும் கவனிக்காவண்ணம் கண்களை துடைத்துக் கொண்டார்.

உதயநிதி ஸ்டாலினும் கண்கலங்கினார். இப்படி ஒரு நிலையில் ஸ்டாலின் ஜாதகத்தில் முதலவராகும் ராசி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்தர பாலாஜி, பா ஜ கவின் எச் ராஜா போன்ற விடீயோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. ஸ்டாலினுக்கு முதல்வராகும் அமைப்பு அவரது ஜாதகத்தில் இல்லை என அதிமுக அமைச்சர்களே பலமுறை கூறியுள்ளனர். இதேபோல் பாஜகவினரும் ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வராகும் ராசியில்லை, ஆகையால் தமிழக முதல்வராக முடியாது என தெரிவித்து வந்தனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் ஸ்டாலின் தற்போது முதல்வராகி, ஜாதகத்தை பொய்யாக்கியுள்ளார். இதனால் நெட்டிசன்கள் பலரும் ஜோசியம் ஜாதகம் எல்லாம் பித்தலாட்டம், கடின உழைப்பு தான் எப்போதும் நிரந்தரம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement