தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர் ஓனர்கள் எல்லாம் சேர்ந்து ‘கங்குவா’ படத்தை ட்ரோல் செய்திருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை படங்கள் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார்.
மேலும், இந்த படத்தை தயாரிப்பாளர் கே. இ. ஞானவேல் ராஜா தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு கங்குவா படம் குறித்து சோசியல் மீடியாவில் பயங்கரமான நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்து இருந்தது. படம் பார்த்துவிட்டு சூர்யாவையும், படத்தையுமே மோசமாக விமர்சித்தும் திட்டி இருந்தார்கள்.
கங்குவா ப்ரோமோஷன்:
குறிப்பாக, இந்த படம் ஒரு பேன் இந்தியா படமாக இருப்பதால் இந்த படத்திற்கு பட குழுவினர் எக்கச்சக்கமாக ப்ரொமோட் செய்திருந்தார்கள். படத்தின் ப்ரமோஷன் களில் இயக்குனர் ஞானவேல் ராஜா மற்றும் நடிகர் சூர்யா பேசியிருந்த விஷயங்கள் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது. ஆனால், படம் வெளியான முதல் ஷோவில் இருந்து இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் வந்திருந்தது. குறிப்பாக படத்தில் ஏகப்பட்ட இரைச்சல் இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தார்கள்.
தியேட்டர் ஓனர்கள் ரவுண்ட் டேபிள்:
இந்நிலையில், சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான தியேட்டர் ஓனர்களுக்கான ரவுண்ட் டேபிள் மீட்டப் நடத்தப்பட்டது. அதில் பேசிய தியேட்டர் ஓனர்கள் கங்குவா படத்தின் தோல்விக்கு காரணங்களை பேசிருந்தார்கள். முதலில் பேசிய ரோகினி தியேட்டர் ரேவந்த், இந்தப் படம் நல்லா ஓடி இருக்கும். ரெண்டு மூணு பேரு இன்டர்வியூ கொடுத்து ஓவரா பில்டப் கொடுத்து இருந்தாங்க. அப்படி எல்லாம் பண்ணாம படத்தை படமா ரிலீஸ் பண்ணி இருந்தா படம் நல்லா ஓடி இருக்கும். கொஞ்சம் ஓவரா பந்தா பண்ணதால நிறைய நெகட்டிவிட்டி ஆயிடுச்சு என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து பேசிய வெற்றி தியேட்டர் ராகேஷ், படத்தை ஆடியன்ஸ் அக்சப்ட் பண்ணல.
கங்குவா படத்தின் மைனஸ்:
முதல் ஷோவிலே படத்தோட ரெஸ்பான்ஸ் நெக்டிவா தான் இருந்தது, இந்த படம் 2000 கோடி கண்டிப்பாக வசூல் செய்யும் என்று சொன்னதெல்லாம் படத்திற்கு மைனஸ் ஆகிவிட்டது என்று கூறியிருந்தார். பின், கேசினோ தியேட்டர் அருண், படத்தில் சவுண்டு ஒரு பெரிய ட்ராபேக்காக இருந்தது. அதை நாங்களே ஃபீல் பண்ணோம். ஸ்கிரீன்ல சவுண்ட் கூட நாங்க கம்மி பண்ணோம், அதை அவங்களே செய்து இருந்தார்கள் என்றால் படம் நல்ல ஓடியிருக்கலாம் என்று கூறியிருந்தார். மேலும், வரதராஜா தியேட்டர் அங்கிதா பேசுகையில், பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
Theatre owners roasting #Kanguva 😂 #KanguvaOnPrime #KanguvaDisaster pic.twitter.com/A9xb5s6hu3
— Bala (@kuruvibala) December 7, 2024
டிசம்பரில் சக்சஸ் மீட் :
ஆனால், மக்கள் கதை நல்லா இல்லை என்றால் தியேட்டரில் மூணு மணி நேரம் எல்லாம் உட்கார விரும்ப மாட்டார்கள் என்று கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய வுட்லேன்ஸ் தியேட்டர் ஓனர் வெங்கடேஷ், ஞானவேல் ராஜா டிசம்பரில் சக்சஸ் மீட் என்று பாஸ் எல்லாம் கொடுத்தார். இப்பவும், நான் பாஸை அப்படியே தான் வைத்துக் கொண்டிருக்கிறேன், அப்புறம், சூர்யா படம் பார்த்தீங்கன்னா வாயை பிளப்பீங்க என்று சொன்னார். ஆனா, படம் பாத்துட்டு என்னை யாரும் பார்க்காமலே, வாயை திறந்துட்டே போய்ட்டாங்க என்று கங்குவா குறித்து பகிர்ந்து இருந்தார். கடைசியாக பேசிய கமலா தியேட்டர் விஷ்ணு, படக்குழுவினர் என்னதான் ப்ரொமோட் செய்தாலும், ஆடியன்ஸ் தான் படம் வெற்றியா தோல்வியா என்று டிசைட் செய்வார்கள் என்று பேசியிருந்தார்.