தமிழ் படம் 2 இயக்குனரையே அசரவைத்த மீம்..! யாருப்பா நீ..?உன்ன பாக்கணும் போல இருக்கு .! மீம் உள்ளே..!

0
2016
Tamizh-padam-2.0

தமிழில் 2010 ஆம் ஆண்டு முழு நீள காமெடி படமாக வெளிவந்த படம் ” தமிழ் படம் “. புதுமுக இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார். லாஜிக் இல்லா காமெடியால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

tamizh padam

- Advertisement -

தமிழ் படம் பாகம் 1- இல் பல்வேறு தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் செய்த பல்வேறு மாஸ் சீன்களை செம கலாய் கலைத்திருப்பார் நடிகர் சிவா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை உதயநிதியின் ஒய் நாட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களை பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்திருந்தனர். அதில் ‘விக்ரம் வேதா’ படத்தையும் விட்டுவைக்கவில்லை. சமீபத்தில் அந்த டெம்ப்லேட்டை பயன்படுத்தி மீம் கிரீயேட்டர் ஒருவர் ‘விக்ரம் வேதா’ வசனத்தை வித்யாசமான முறையில் மீம் செய்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த டெம்ப்லேட் தற்போது ட்ரெண்டாக மாற, இதனை கண்ட ‘தமிழ்’ படத்தின் இயக்குனர் அமுதனும் இம்ப்ரெஸ் ஆகியுள்ளார். அதனால் அந்த மீமை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமுதன் “என் இனமடா நீ. யாருப்பா நீ மீம் கிரீயேட்டர்? எனக்கே உன்ன பாக்கணும் போல இருக்கே ” என்று அந்த மீம் கிரேயேட்டரை பாராட்டியுள்ளார்.

Advertisement