நடிகர் விஜய் சர்கார் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசியதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் வாதிகளும் விஜய் பேசியதை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பா ஜ க கட்சியின் தமிழிசை சௌந்தர்ராஜன் விஜய் பேசியதை விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement

சமீத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கும் வரட்டும், அதனை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். அரசியலுக்கு வந்தால் தான் நடிப்பதும் அரசியலும் எந்த அளவிற்கு வேறுபாடு இருக்கிறது என்பது தெரியும். சினிமாவில் இருந்து வருபர்வர்கள் எல்லாம் அரசியல்வாதிகளுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்து விடுகின்றனர்.

நடிகர் விஜய் முதல்வராக இருந்தவர்கள் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது போல பேசியுள்ளதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நடிகர்கள் தான் நடிக்கின்றனர் அதே போல இனிமேல் ஒருவர் வந்துதான் முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னுதாரணமாக இருந்து காட்ட வேண்டும் என்று அவசியமில்லை.

Advertisement

Advertisement

இப்போதைக்கு நடிகர் விஜய்யை பற்றி பேசி அவருடைய படத்தை நான் ஓட வைக்க வேண்டுமா என்று பார்க்கிறேன் என தமிழிசை கூறியுள்ளார். ஏற்கனவே, தமிழிசையும், பா ஜ க வினர் சிலரும் விஜய் நடித்த மெர்சல் படத்தை எதிர்த்து குரல் கொடுத்தால் அந்த படத்திற்கு ஒரு மிகபெரிய விளம்பரம் கிடைத்து என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

Advertisement