நடிகர் விஜய்யை குறிவைக்கிறது வருமான வரித்துறை? – விவரம் உள்ளே !

0
763

இந்த ஆண்டு தொடக்கத்தில், நடிகர் விஜய்யின் விண்ணப்பத்தை ஏற்கலாமா அல்லது வழக்குத் தொடரலாமா என வருமான வரித்துறை தரப்பில் ஆலோசிக்கப்பட்டாலும் முடிவு எட்டப்படவில்லை. இந்த விவகாரத்தில், எப்போது வேண்டுமானாலும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு எடுக்கலாம். குறிப்பிட்ட கால வரைமுறை கிடையாது.
mersal தானே முன்வந்து அபராதத்துடன் வரியைசெலுத்துவது அல்லது நீதிமன்றத்தில் வழக்கைச் சந்திப்பது என இரு விஷயங்களை நடிகர் விஜய் செய்ய முடியும். வரியைச் செலுத்திவிட நடிகர் விஜய் முன்வந்திருந்தாலும், வருமான வரித்துறை ஆணையர்கள் கூட்டுக் குழுவில்தான் அவரின் விண்ணப்பத்தை ஏற்பதா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

சில மாதங்களுககு முன், அபராதத்துடன் வரியைச் செலுத்திவிடுகிறீர்களா அல்லது நீதிமன்றம் வழியாக வழக்கைச் சந்திக்கிறீர்களா என எஸ்.எம்.எஸ் வழியாக பதில் கேட்டபோது, விஜய்யிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லையாம்.

தற்போது, ‘மெர்சல்’ படத்தில் நடிகர் விஜய், மத்திய அரசின் திட்டங்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
mersalஇதனால், நடிகர் விஜய்யின் விண்ணப்பத்தை ஏற்காமல், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாமா என டெல்லி உத்தரவை எதிர்பார்த்து வருமான வரித்துறையினர் காத்திருப்பதாகவும் ‘மெர்சல்’ விவகாரம் தணிந்த பின்னர், சட்டரீதியான நடவடிக்கையைத் தொடங்கலாம் எனத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது