‘ஜெய் பீம்’ க்கு கொடுக்கல, ஆனா கடத்தல்காரர்களுக்கு – ‘புஷ்பா’வை வெளுத்து வாங்கிய தெலுங்கானா அமைச்சர்

0
293
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே ‘புஷ்பா 2’ படம் குறித்த செய்திகள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த படம் தான் ‘புஷ்பா 2’. இந்த படத்தின் முதல் பாகம் ‘புஷ்பா’ வெற்றி பெற்ற நிலையில், சமீபத்தில் ‘புஷ்பா 2’ வெளியானது. இந்த படம் உலக அளவில் மெகா ஹிட் அடித்து, சுமார் 1500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது.

-விளம்பரம்-

இது ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதாவது, புஷ்பா 2 படத்தில் சிறப்பு காட்சியை காண்பதற்கு ஹைதராபாத்தில் இருக்கும் சந்தியா தியேட்டர் ஒன்றுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் முன்னறிவிப்பு எதுவும் இன்றி வந்திருக்கிறார். அதன் காரணமாக, அங்கு அல்லு அர்ஜுனை காண கூட்டம் அலைமோதியது. அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்கிற பெண் ரசிகை ஒருவர் உயிரிழந்தார்.

- Advertisement -

புஷ்பா 2 சர்ச்சைகள்:

அதோடு, அந்தப் பெண்ணின் மகனும் தற்போது கோமாவில் இருக்கிறார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பலரும் அல்லு அர்ஜூனுக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவிட்டு வந்தார்கள். அதற்குப்பின் அல்லு அர்ஜுன், மறைந்த ரேவதி என்கிற அந்த ரசிகைக்கு ரூபாய் 25 லட்சம் நிதியுதவி செய்ய இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு வருத்தம் தெரிவித்து இருந்தார். ஆனால், அல்லு அர்ஜுன் மீது கொடுக்கப்பட்ட புகாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

அல்லு அர்ஜுன் கைது:

ஆனால், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சில மணி நேரங்களிலேயே ஜாமீன் பெற்று விடுதலையானார். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது ரசிகர்களும், தெலுங்கு திரையுலகினரும் ஒன்று திரண்டு அவருக்கு ஆறுதல் எல்லாம் கூறியிருந்தார்கள். அதற்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ‘அல்லு அர்ஜுன் ஒன்றும் கிட்னியையோ, கண்ணையோ இழக்கவில்லை. அவருக்கு ஆதரவு தெரிவித்த தெலுங்கு திரையுலகினர் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை கண்டு கொள்ளவே இல்லை’ என்று காட்டமாக பேசியிருந்தார்.

-விளம்பரம்-

தெலுங்கானா அசிஸ்டன்ட் கமிஷனர்:

அதைத்தொடர்ந்து , மீபத்தில் தெலுங்கானா மாநில அசிஸ்டன்ட் கமிஷனர், பெரிய ஸ்டார் ஹீரோக்களின் படங்களை அதிக விலை கொடுத்து பார்ப்பதைவிட, நல்ல கருத்துக்களை சொல்லும் பா ரஞ்சித்தின் படங்களை பார்க்குமாறு நடுத்தர வர்க்கத்தினர் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். பா ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் எடுக்கும் படங்களை 2000 அல்லது 4000 ரூபாய் கொடுத்து கூட பார்க்கலாம் என்று நான் பரிந்துரை செய்வேன். ஹீரோக்களை தெய்வமாக நினைத்து பணத்தை வீணாக்காதீர்கள். அந்தப் படங்களை அதிக விலை கொடுத்து பார்ப்பதை விட டிஜிட்டல் பிளாட் ஃபார்ம்களில் கம்மி விலையில் நீங்கள் பார்க்கலாம் என்று ‘புஷ்பா 2’ வை தாக்கி கருத்து தெரிவித்திருந்தார்.

அமைச்சர் சீதாக்கா:

இந்நிலையில், இது தொடர்பாக தெலுங்கானா மாநில அமைச்சர் சீதாக்கா பேசுகையில், ‘ஜெய்பீம் ‘ போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. ஆனால், செம்மர கடத்தல் கும்பல் பற்றிய ‘புஷ்பா’ படத்துக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. ஒரு கடத்தல்காரர் ஹீரோவாகவும், காவல்துறையை வில்லனாக சித்தரித்த படம் தான் ‘புஷ்பா’ . ஆனால், அந்தப் படத்திற்கு தேசிய விருது என்று காட்டமாக கூறியிருக்கிறார். தற்போது அமைச்சரின் இந்த கருத்து குறித்து மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement