சர்ச்சையை ஏற்படுத்திய சாய் பல்லவியின் கருத்து, போலீசார் அனுப்பிய நோட்டீஸ். சாய் பல்லவி அனுப்பிய மனுவுக்கு நீதி மன்றம் கொடுத்த பதில்.

0
421
saipallavi
- Advertisement -

காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலையும், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலும் வன்முறையே என சுட்டிக்காட்டி பேசிய சாய் பல்லவி மீது புகார் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் நீதி மன்றம் சாய் பல்லவியின் மனுவை ரத்து செய்து இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. சமீபத்தில் நானி நடிப்பில் இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’. இது மறுபிறவியை மையமாக கொண்டு உருவாகி இருந்த படம். இப்படத்தில் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது.

-விளம்பரம்-

சமீபத்தில் சாய்பல்லவி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், சமீபத்தில் வெளியான காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் கொலை செய்யப்படுவதாக காட்டி இருப்பார்கள்.இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்படுவதும், கொரோனா காலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவரை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல சொல்லி தாக்குதல் நடத்திக் கொல்வதும் ஒன்று தான்.

- Advertisement -

இதையும் பாருங்க : திருமணமான ஓராண்டிலேயே கணவரை பிரிந்த சுகன்யாவிற்கு பிறந்த ஒரே மகள் – இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

சர்ச்சைக்கு உள்ளான பேச்சு :

இரண்டுமே தவறு தான் என்று கூறியிருந்தார். இப்படி சாய்பல்லவி அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவாகவும், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே போல  இந்துத்துவா ஆதரவாளர்கள், பாஜகவினர் உள்ளிட்ட பலர் சாய் பல்லவியின் கருத்துக்களை விமர்சித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சாய் பல்லவி மீது நடிகை சாய்பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

சாய் பல்லவி மீது புகார் :

ஹைதராபாத்தில் உள்ள சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் புதன்கிழமை புகார் அளித்ததுள்ளார். அந்த புகாரில், நடிகை சாய் பல்லவி காஷ்மீர் பயங்கரவாதிகளை, பசு காவலர்களுக்கு சமம் என்று ஒப்பிட்டு பேசியது தவறு என்றும் நடிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நடிகை சாய் பல்லவிக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

சாய் பல்லவியின் விளக்கம் :

தனது கருத்திற்கு விளக்கமளித்த சாய் பல்லவி ‘நான் எப்போது பேசினாலும் நடுநிலை பேணியே என் கருத்தை முன்வைப்பேன். ஆனால், என் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. முக்கியமான பிரபலங்களும், இணையதளங்களும் முழுமையான என் நேர்காணலை பார்க்காமல் கருத்து கூறியது வேதனையளிக்கிறது.னக்காக நின்ற உள்ளங்களுக்கு நன்றி. எனக்காக குரல் உயர்த்திய உள்ளங்களுக்கு நன்றி. நான் தனியாக இல்லை என உணர வைத்தவ உங்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்து இருந்தார்.

மனுவை ரத்து செய்த நீதி மன்றம் :

இந்நிலையில் சாய் பல்லவி மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பஜ்ரங் தள அமைப்பின் உறுப்பினர் அகில் என்பவர் ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஒரு பிரிவினரின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக சாய்பல்லவிக்கு ஐதராபாத் காவல் துறையினர்  நோட்டீஸ் அனுப்பினர். போலீசார் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாய் பல்லவி தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் சாய் பல்லவியின் மனுவை விசாரித்த தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி மனுவை ரத்து செய்துள்ளார். 

Advertisement