பத்திரிக்கையாளர்களை ஆக்ரோஷமாக தாக்கும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு , வைரலாகும் வீடியோ இதோ

0
160
- Advertisement -


பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு பத்திரிக்கையாளர்களை விரட்டி தாக்கி இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தும் சில விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், நாக சைதன்யா – சோபிதா திருமணம் முடித்த பிறகு நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தா போடும் பதிவுகள் பற்றி அதிகமாக விவாதிக்கப்படுகிறது.

-விளம்பரம்-

அதேபோல், நடிகர் மோகன் பாபு மற்றும் அவரது மகன் மஞ்சு மனோஜ் ஆகியோரிடையே ஏற்பட்டிருக்கும் சொத்து தகராறும் தெலுங்கு மீடியாவில் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. அதாவது தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் மோகன் பாபு. அவருக்கு விஷ்ணு மஞ்சு, மஞ்சு மோகன் என இரண்டு மகன்களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் சினிமா துறையில் தான் இருக்கின்றனர்.

- Advertisement -

மோகன் பாபு குறித்து:

மேலும், நடிகர் மோகன் பாபு தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை கொண்டு ஆந்திராவில் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி வைத்திருக்கிறார். திருப்பதியில் மோகன் பாபுக்கு சொந்தமாக ஒரு யுனிவர்சிட்டியும் இருக்கிறது. இந்நிலையில், தற்போது மோகன் பாபு மற்றும் அவரது மகன் மஞ்சு மோகன் ஆகியோர் இடையே சொத்து தகராறு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சொத்து தகராறு:

எனவே இருவரும் அளித்த புகாரின் பேரில், இவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், மோகன் பாபுவின் மற்றொரு மகன் மஞ்சு விஷ்ணு இன்று வெளிநாட்டில் இருந்து ஹைதராபாத் வந்துள்ளார். அவர் வருவதற்கு முன்பே அவரது தரப்பில் 30 தனிப் பாதுகாவலர்களும், மஞ்சு மனோஜ் தரப்பில் தனிப் பாதுகாவலர்களும் மோகன் பாபு வீட்டில் குவிக்கப்பட்டனர். இதனால் இன்று காலை முதலே அந்த பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது.

-விளம்பரம்-

குவிக்கப்பட்ட பௌன்சர்கள்:

இதனிடையே மஞ்சு மனோஜ் தனக்கும், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநில டிஜிபிக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில், மோகன் பாபு வீட்டிற்கு மஞ்சு மனோஜ் சென்ற வாகனத்தை விஷ்ணுவின் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அப்போது செய்தி சேகரிப்பதற்காக உள்ளே சென்ற பத்திரிக்கையாளர்களை மோகன் பாபு மற்றும் அவரது பாதுகாவலர்கள் தாக்கியுள்ளார்கள்.

பத்திரிக்கையாளர்களை தாக்கிய மோகன் பாபு:

அது மட்டுமல்லாமல் செய்தியாளர்களின் கேமரா, மைக் ஆகியவற்றை உடைத்து அடித்து விரட்டி இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், பத்திரிக்கையாளர்கள் மீது நடிகர் மோகன் பாபு மற்றும் அவரது பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்தியதற்கு பத்திரிகையாளர்கள் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் ஜலபல்லியில் உள்ள மோகன்பாபு வீட்டில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Advertisement